அரசு பள்ளியா இது.. திருப்பூரே திகைச்சு போச்சு.. உலகத்தரத்தில் வசதிகள்.. நீங்களே பாருங்க
திருப்பூர்: திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன மெய் நிகர் 8 வகுப்பறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.
கல்வி தான் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆகச்சிறந்த சொத்து, செல்வம் எல்லாமே. அதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி, கணிணி வசதி, விளையாட்டு வசதி, உலகத்தரம் வாய்ந்த கட்டிடங்கள், பேருந்து வசதி என பல வசதிகள் அதிடியாக வந்தன. சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தின.
இதை பார்த்த நடுத்த , பணக்கார பெற்றோர் அரசு பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் சேர்க்க தொடங்கினர். இதனால் ஏழை மக்களின் குழந்தைகள் படிக்கும் இடமாக மட்டுமே அரசு பள்ளிகள் இப்போது மாறி உள்ளன, அதேநேரம் அரசு பள்ளிகள் என்றாலே ஓடுகள் வேயப்பட்ட பகுதி, சில மரங்கள் அருகில் இருக்கும், அதி நவீன வசதிகள் எதுவும் இல்லாமல் அடிப்படைகள் வசதிகளுக்கு கூட கஷ்டப்படுவார்கள் என்ற நிலை ஒரு காலம் வரை இருந்தது.
படிப்படியாக இந்த நிலைமாறி வருகிறது. ஏரளமான அரசு பள்ளிகளுக்கு மிக அதிநவீன வசதிகளுடன் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் பல தனியார் பள்ளிக்கு நிராக மாறி வருகின்றன. கல்வித்தரம், கட்டுமானம், கட்டமைப்பு வசதிகள் பல விஷயங்களில் அரசு பள்ளிகள் மாறி வருகின்றன.
இதை பார்த்து பல பெற்றோர் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் சில அரசு பள்ளிகளில் மாணர்களை சேர்ப்பது குதிரைகொம்பு என்கிற அளவிற்கு போட்டியும் உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு அரசு பள்ளி அந்த அளவிற்கு வந்துவிட்டது. அதற்கு காரணம் பள்ளிகள் கட்டமைப்பும், கல்வி தரமும் தான். அரசு பள்ளிகளின் தரம் தற்போது பெரிய அளவில் தனியார் பொதுமக்கள் பங்களிப்புடன் மாறி வருகிறது.

திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன மெய்நிகர் 8 வகுப்பறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. அக்ஷயா டிரஸ்ட் மற்றும் 15 வேலம்பாளையம் அறிவு திருக்கோவில் இணைந்து கொடையாளர்கள் துணையுடன் திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன மெய் நிகர் 8 வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளது.
வகுப்றைகள் எல்லாமே மிக அருமையாக இருக்கிறது. பள்ளி வகுப்பறைகள் ஏசி வசதியுடன் இருக்கின்றன. டிஜிட்டல் கிளாஸ் ரூம்கள் இருக்கின்றன. கரும்பலகைகள்இருக்கும் இடத்தில் டிஜிட்டல் திரைகள் காணப்படுகின்றன. நாற்காலிகள், டேபிள்கள் மிக அற்புதமாக இருக்கின்றன. வகுப்பறைகள் வண்ண ஓவியங்களால் சூப்பராக இருக்கிறது.












Click it and Unblock the Notifications