அங்கே ஆ. ராசா + இங்கே எல். முருகன்.. ஒரே நாளில் நீலகிரி பிஸி.. முதல்வர் இன்று திருப்பூர் வருகை.. பலே
திருப்பூர்: திருப்பூர், நீலகிரி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.. முதல்வரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது.

ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது... எனவே, தேசிய தலைவர்களும் பிரச்சாரத்துக்காக, தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள்.. தமிழக அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை மும்முரப்படுத்தி வருகின்றன.
வேட்பாளர்கள்: தமிழக முதல்வர் ஸ்டாலினும், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் முன்னெடுத்து வருகிறார்.. இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையுல், இன்றையதினம், அவினாசி பழங்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். நீலகிரி வேட்பாளர் ஆ.ராசா, திருப்பூர் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.
அவினாசி பழங்கரையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று மாலை உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்.. இதற்காகவே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி வேட்பாளர் ஆ.ராசா, திருப்பூர் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.
அவினாசி: இந்த கூட்டத்தில் திருப்பூர், நீலகிரி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட திருப்பூர், கோபி, பெருந்துறை, பவானிசாகர், சத்தியமங்கலம், அவினாசி, கவுண்டம்பாளையம், கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து திரளான மக்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூரில் இன்று டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
இன்றைய தினம், தேதி நீலகிரியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பிரச்சாரம் செய்ய போகிறார்.. பிறகு கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் 10 ஆயிரம் பெண்களுடன் சென்று அண்ணாமலைக்கு ஆதரவாகவும், பொள்ளாச்சியில் பாஜக வேட்பாளர் வசந்தராஜனுக்கு ஆதரவாகவும் நிர்மலா சீதாராமன் ஆதரவு திரட்டுகிறார்.
எகிறும் எதிர்பார்ப்பு: நீலகிரியின் திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் இருவருக்காகவும் முதல்வரும், நிதியமைச்சரும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.. ஒரேநாளில் நடைபெறும் பிரச்சாரம் என்பதால், தமிழக அரசியலின் கவனம் கொங்குவில் அழுத்தமாக குவிந்துவருகிறது.












Click it and Unblock the Notifications