உனக்காக சென்னைக்கு வர்றேன்.. வானம் இடியும் அளவு சிரித்த கயல்விழி.. வைரலாகும் வாட்ஸ் ஆப் ஆடியோ
பெண்ணிடம் திருப்பூர் எஸ்பியின் ஆடியோ பேச்சு வைரலாகிறது.
Recommended Video

திருப்பூர்: மது விலக்குப் பிரிவு கூடுதல் எஸ்பி ஒருவர், பெண்ணிடம் பேசும் பேச்சு வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்ட மது விலக்கு கூடுதல் எஸ்பி குணசேகரனும், ஒரு பெண்ணும் பேசும் பேச்சுதான் வைரலாகியுள்ளது. எஸ்.பி. பேச பேச அந்தப் பெண் ரொம்ப கூடுதல் உரிமை எடுத்து கொஞ்சுவது போல பேசுகிறார்.
ஹாஹாஹாஹவென வானம் இடியும் அளவுக்கும் சிரிக்கிறார் பேச்சின் இடையே. படு செயற்கையாக இருக்கிறது அப்பெண்ணின் பேச்சு. ஆனால் ஏஎஸ்பிதான் ஏமாந்து விட்டார் என்று தெரிகிறது.

ஆடியோ பேச்சு
திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி., குணசேகரன். இவர்தான் 'அவர்'. சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசிய ஆடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது.

கொஞ்சல்... குலாவல்
அதில் எஸ்.பி. சாரின் கொஞ்சல், குலாவல், கெஞ்சல், வர்ணனை என பல வகைககளில் பேச்சிலேயே பின்னி எடுக்கிறார். அந்த பெண்ணும் சும்மா இல்லை.. கொஞ்சும்போதெல்லாம் சிரிக்கிறார்.. வர்ணிக்கும்போதெல்லாம் வெட்கப்படுகிறார்.

ஒரு சின்ன சாம்பிள்
"'வாட்ஸ் ஆப் குரூப்பை விட்டு ஏன் வெளியே போயிட்டீங்க?" இப்படித்தான் அந்த ஆடியோ ஆரம்பிக்குது. பிறகு மெல்ல மெல்ல காதல் ரசம் சொட்ட தொடங்கிறது. அதிலிருந்து ஒரு குட்டி சாம்ப்பிள்:
கூடுதல் எஸ்பி: என்னடா... கண்டுக்கவே மாட்டேங்கற...அழகா இருக்கிற பொண்ணு நீ... உனக்கு என்ன குறை...?
பெண்: வெளியே சொல்லிடாதீங்க. சிரிப்பாங்க. அப்ப நீங்க என்னை இன்னும் பாக்கலைன்னு... அர்த்தம்"
கூடுதல் எஸ்பி: "கருப்பா, குண்டா இருந்தாலும், முகம் லட்சணமா இருக்கா... இல்லையா? நீங்க என்ன பன்றீங்க? உங்கள பார்க்க நான் சென்னைக்கு வரட்டுமா?
பெண்: "திருப்பூர்ல இருந்து சென்னைக்கு வர்றீங்களா, அதுவும் என்னைய பார்க்கவா?"
கூடுதல் எஸ்.பி: "ஏன், வரமாட்டோமா? நான், உங்கள வந்து பார்த்தா சந்தோஷப்படுவீங்களா, இல்லையா?
பெண்: சந்தோஷப்படுவேன். நமக்கும் காவல்துறை சப்போர்ட் பண்ணுதுன்னு நினச்சு சந்தோஷப்படுவேன்.
கூடுதல் எஸ்.பி: அப்படி வந்தா காவல்துறை அதிகாரியா வரமாட்டேன். தனி நபராதான் வருவேன், வரட்டுமா?
பெண்: தாராளமா வாங்க சார்... என்னைக்கும் உங்களை சென்னை வெல்கம் பண்ணும்...
கூடுதல் எஸ்.பி: சென்னை வெல்கம் பண்ணுதோ, இல்லையோ... நீ வெல்கம் பண்ணுவியா...? கயல்விழியை பார்க்க வரனுமா, வேண்டாமா?
பெண்: கயல்விழி சென்னையிலதான் இருக்கா, அதான் சென்னை வெல்கம் பண்ணும்னு சொன்னேன்.

இது ஒரு சதி
இப்படியே இந்த ஆடியோ 4 நிமிடத்துக்கு நீள்கிறது. இது குறித்து, கூடுதல், எஸ்.பி.யிடம் கேட்டால், ஒரு பிரச்சனை சம்பந்தமா 8 மாசத்துக்கு முன்னாடி ஒரு பெண், என்னை கூப்பிட்டு பேசினார். ஆனா எந்த தவறான நோக்கத்திலும் நான் பேசவில்லை,. என் பெயரை கெடுக்கவே இப்படி சிலர் செய்துள்ளார்கள் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications