திருப்பூர், செங்கல்பட்டு மக்களுக்கு குட் நியூஸ்! மீண்டும் அமலாகும் தமிழக அரசின் 2 சூப்பர் திட்டங்கள்
திருப்பூர்: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள், இப்போது தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதனால் திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மக்களுக்கு கிடைக்கவிருந்த 2 முக்கிய திட்டங்களும் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன..!!
தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இடைத்தேர்தல் நடத்தை விதிகள்
இதனிடையே அதிமுகவை சேர்ந்த மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் காலியான 2 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.
தமிழகத்தில் தேர்தல் வந்தாலே அரசின் புதிய திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் அறிவிப்பதில் சில கட்டுப்பாடுகள் வந்துவிடும்.. அதுவும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு இன்னும் தீவிரமாகவே இருக்கும்.
பரிசுப் பொருட்களுக்கும் தடை
அப்படித்தான் இந்த முறையும், இடைத்தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதுடன், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் மூலம் வாக்காளர்களை கவர்வதைத் தடுக்க பறக்கும் படைகளும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன..
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து ரிசல்ட்டும் அறிவிக்கப்பட்டன.
வாபஸ் பெறப்பட்ட பறக்கும் படைகள்
இந்த நிலையில், திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகளும், பறக்கும் படைகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
தேர்தல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை தேர்தல் விதிகளால் செயல்படுத்த முடியாமல் இருந்த அரசு திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த வழி ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய அரசு திட்டங்களை செயல்படுத்த இனி தடையில்லை... எனவே திருப்பூர், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு முக்கியமான 2 திட்டங்கள் மீண்டும் அமலுக்கு வருகின்றன..
மீண்டும் அமலுக்கு வரும் 2 திட்டங்கள்
அந்த வகையில், "தாய்மாமன் தங்க மோதிரம்" திட்டம், "வெற்றிப்பயண திட்டம்" ஆகியவை திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கியுள்ள நிலையில், இந்தத் திட்டங்களின் பயன்களை மக்கள் மீண்டும் பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
தேர்தல் அறிவிப்பு, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என இடைத்தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த 2 மாவட்டங்களிலும் மேற்கண்ட அரசு திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.,.!!



Click it and Unblock the Notifications
