திருப்பூர் வருவாய் துறையில் அதிரடி .. தாசில்தார்கள் உள்பட அரசு ஊழியர்களுக்கு பறந்து வந்த ஆர்டர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் நிர்வாக நலன் கருதி 11 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் நெடுஞ்சாலை அலகு-4 நில எடுப்பு தனிதாசில்தாராக இருந்த சாந்தி திருப்பூர் தெற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், அவினாசி சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த ஜெகநாதன் திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை அலகு-4 நிலம் எடுப்பு தனிதாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "திருப்பூர் மாவட்ட தேர்தல் தனிதாசில்தாராக இருந்த தங்கவேல் தாராபுரம் கோட்ட கலால் அலுவலராகவும், காங்கயம் ஆதிதிராவிடர் நல நில எடுப்பு தனிதாசில்தாராக இருந்த நந்தகோபால் திருப்பூர் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராகவும், திருப்பூர் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராக இருந்த கனகராஜன் திருப்பூர் மாவட்ட தேர்தல் தனிதாசில்தாராகவும், தாராபுரம் கோட்ட கலால் அலுவலராக இருந்த ஜெகஜோதி காங்கயம் ஆதிதிராவிடர் நல நில எடுப்பு தனிதாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் நெடுஞ்சாலை அலகு-4 நில எடுப்பு தனிதாசில்தாராக இருந்த சாந்தி திருப்பூர் தெற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், அவினாசி சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த ஜெகநாதன் திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை அலகு-4 நிலம் எடுப்பு தனிதாசில்தாராகவும், திருப்பூர் தெற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த ஜலஜா மடத்துக்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், மடத்துக்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த கண்ணாமணி மாவட்ட வழங்கல் அதிகாரியின் நேர்முக உதவியாளராகவும், மாவட்ட வழங்கல் அதிகாரியின் நேர்முக உதவியாளராக இருந்த ராகவி மாவட்ட வழங்கல் துறை பறக்கும்படை தனிதாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் வடக்கு குடிமைப்பொருள் தனிதாசில்தாராக இருந்த உஷாராணி அவினாசி சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், திருப்பூர் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் சில்லறை விற்பனை உதவி மேலாளராக இருந்த கோவிந்தசாமி திருப்பூர் வடக்கு குடிமைப்பொருள் தனிதாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் 17 துணை தாசில்தார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் மாநகராட்சி தேர்தல் துணை தாசில்தாராக இருந்த வசந்தா திருப்பூர் தெற்கு வட்ட வழங்கல் அலுவலராகவும், உடுமலை மண்டல துணை தாசில்தாராக இருந்த சந்திரசேகர் மடத்துக்குளம் வட்ட வழங்கல் அலுவலராகவும், மடத்துக்குளம் வட்ட வழங்கல் அலுவலராக இருந்த தினேஷ்ராகவன் உடுமலை மண்டல துணை தாசில்தாராகவும், திருப்பூர் மாவட்ட தேர்தல் துணை தாசில்தாராக இருந்த மணிமேகலை திருப்பூர் மாவட்ட ஈ பிரிவு தலைமை உதவியாளராகவும், திருப்பூர் வடக்கு தேர்தல் துணை தாசில்தாராக இருந்த ரம்யா திருப்பூர் தெற்கு தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், திருப்பூர் தெற்கு வட்ட வழங்கல் அலுவலராக இருந்த ராசு திருப்பூர் வடக்கு தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட வருவாய் அலகு துணை தாசில்தாராக இருந்த சரவணக்குமார் ஊத்துக்குளி மண்டல துணை தாசில்தாராகவும், திருப்பூர் மாவட்ட வருவாய் அலகு துணை தாசில்தாராக இருந்த வளர்மதி மடத்துக்குளம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், திருப்பூர் வடக்கு தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த லோகநாதன் கலெக்டர் அலுவலக ஆ பிரிவு தலைமை உதவியாளராகவும், மடத்துக்குளம் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த விஷ்ணுகண்ணன் கலெக்டர் அலுவலக ஓ பிரிவு தலைமை உதவியாளராகவும், மாவட்ட வருவாய் அலகு துணை தாசில்தாராக இருந்த மகேஸ்வரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலக ஈ பிரிவு தலைமை உதவியாளராக இருந்த அருண்குமார் திருப்பூர் வடக்கு தேர்தல் துணை தாசில்தாராகவும், திருப்பூர் மாவட்ட வருவாய் அலகு துணை தாசில்தாராக இருந்த ஸ்ரீநந்தினி அவினாசி தேர்தல் துணை தாசில்தாராகவும், அவினாசி தேர்தல் துணை தாசில்தாராக இருந்த சாந்தி அவினாசி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளார்கள்.
திருப்பூர் மாவட்ட வருவாய் அலகு துணை தாசில்தாராக இருந்த கலாவாணி டாஸ்மாக் கிடங்கு உதவி மேலாளராகவும், கலெக்டர் அலுவலக தேர்தல் துணை தாசில்தாராக (1) இருந்த மைவிழி கலெக்டர் அலுவலக தேர்தல் துணை தாசில்தாராகவும் (2), மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தலைமை உதவியாளராக இருந்த பிரேமலதா கலெக்டர் அலுவலக உழவர் பாதுகாப்பு திட்ட தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications