போயும் போயும் லிப்ட்டுக்குள்ளே.. யார்னு பாருங்க.. இப்ப வெட்டவெளிச்சமாயிடுச்சு.. தாராபுரம் ரோட்டுலதான்
திருப்பூர்: வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. தாராபுரம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த நிகழ்வு, காண்போரை கதிகலங்க செய்து வருகிறது.
பிரபலம்: தாராபுரம் ரோட்டில் மிகவும் பிரபலமான ஹோட்டல், வெங்கடேஸ்வரா மெஸ்... சுற்றுவட்டார பகுதி மக்கள், இந்த ஹோட்டலில்தான், தங்கள் வீட்டு விசேஷகளுக்கு சாப்பாடு ஆர்டர் செய்வார்கள்.
இந்த ஹோட்டலுக்கு சம்பந்தப்பட்ட மண்டபம் ஒன்றும் இயங்கி வருகிறது. அதனால், குழந்தைகளின் காதுகுத்து முதல் கல்யாணம் வரை இந்த ஹோட்டலிலேயே நிகழ்வுகளை முடித்து கொள்வார்கள். நிகழ்ச்சி ஒருபக்கம், உணவு மறுபக்கம் என களைகட்டும்.
இதனால், எப்போதுமே இந்த ஹோட்டல் படுபிஸியாக காணப்படும்.

லிப்ட்: இந்நிலையில், இந்த ஓட்டலின் லிப்ட் ஒன்றில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.. சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களை எடுத்து கொண்டு, ஊழியர்கள் லிப்ட்டில் செல்ல முயன்றுள்ளனர்.. அப்போதுதான் லிப்ட் உள்ளே பாம்பு இருப்பதை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளனர்.. பிறகு, உடினயாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்..
அவர்கள் வரும்வரை, அந்த லிப்ட்டிலேயே பாம்பு படுத்திருந்தது.. தீயணைப்பு வீரர்கள் லிப்ட்டில் இருந்து பாம்பை மீட்டு, பிளாஸ்டிக் பைப் ஒன்றில் போட்டுக்கொண்டனர்.. அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாம்பை கொண்டுபோய் பத்திரமாக விட்டு விடுவதாகவும் சொல்லி சென்றனர். அந்த பாம்பு கண்ணாடிவிரியன் வகையை சேர்ந்ததாம்.. இங்கு எப்படி பாம்பு வந்தது என்றுதான் புரியவில்லையாம்.
பரபரப்பு: இங்கு பாம்பு வந்துள்ள செய்தி, தாராபுரத்தில் பரபரப்பை தந்துவிட்டது.. இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகிவிடவும், கதிகலங்கிவிட்டனர்.. மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும், பிரபலமான உணவகங்கள், டீக்கடைகள் எத்தனையோ இருக்கின்றன.. அவைகளை அடிக்கடி சோதனையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் இணையத்தில் ஒலிக்க துவங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications