அமெரிக்கா உடன் வர்த்தக வாய்ப்பை தொடர திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பின்னலாடை நகரான திருப்பூரில் வருடத்திற்கு ரூ.44,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. திருப்பூரில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் 12 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். டிரம்ப்பின் வரி விதிப்பால் பெரும் பாதிப்பை திருப்பூர் சந்தித்துள்ளது. இதையடுத்து அமெரிக்க வர்த்தக வாய்ப்புகளை தொடர திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தங்களது ஆடை உற்பத்தி கட்டணத்தில் இருந்து 5 முதல் 7 சதவீதம் வரை விலக்கு அளித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர்.


12 லட்சம் பேர் வேலைவாய்ப்பு

பின்னலாடை நகரான திருப்பூரில் வருடத்திற்கு ரூ.44,000 கோடிக்கு கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 'டாலர் சிட்டி' என்று செல்லமாக அழைக்கப்படும் திருப்பூரில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இதன் மூலம் 12 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் ஆயத்த ஆடை என்றாலே அது திருப்பூர் தான் என்கிற அளவிற்கு உள்ளது.

Tiruppur exporters to waive 7 percent on garment manufacturing duty to pursue US trade opportunity

44 ஆயிரம் கோடி வருவாய்

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு ரூ.44 ஆயிரத்து 747 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தம் திருப்பூரில் நடந்துள்ளது. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வர்த்தகம் நடந்து வருகிறது. தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்த காரணத்தால், திருப்பூரில் தொழில் வாய்ப்புகள் முடங்கி உள்ளன. மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது


சிறுகுறு நிறுவனங்கள்

திருப்பூரை பொறுத்தவரை ஏற்றுமதியாளர்களில் 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் தான் பல்வேறு நாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்கின்றன. அமெரிக்காவுக்கு சென்று வந்த 40 சதவீதம் ஆடைகள் டிரம்பின் வரி விதிப்பால் இப்போது முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.

போட்டி நாடுகளுக்கு வரி குறைவு

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை இந்தியா மேற்கொண்டு வருகிறது. போட்டி நாடுகளான வியட்நாம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைவிடவும் வரி விதிப்பு இந்தியாவிற்கு அதிகமாக உள்ளது. தற்போது ஏற்கனவே ஆர்டர்கள் கொடுத்த அமெரிக்க வர்த்தகர்கள் கேட்டுக்கொண்டதால் திருப்பூரில் ஆடை உற்பத்தி செய்யும் ஏற்றுமதியாளர்கள் 3 முதல் 5 சதவீதம் உற்பத்தி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க தயாராக இருந்தார்கள். அதன்படி விலக்கு அளித்து அமெரிக்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்தனர். கடந்த 27-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் ஜவுளிப்பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அமல்படுத்திய காரணத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் ஆர்டர்

தற்போதைய நிலையில் அமெரிக்க ஆர்டர்களை பெற்று 45 நாட்கள் முதல் 90 நாட்களில் அனுப்பி வைக்கிறார்கள். 50 சதவீத வரி விதிப்பு காரணமாக ஏற்கனவே அமெரிக்க வர்த்தகர்களிடம் இருந்து பெற்ற ஆர்டர்களை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அனுப்பி வைப்பதில் தேக்கம் எழுந்துள்ளது. லாபமே கிடைக்காமல் போகும் நிலையும் எழுந்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆர்டர்களை அமெரிக்க வர்த்தகர்கள் கொடுத்துள்ளனர்.


ஆடை உற்பத்தி கட்டணத்தில் விலக்கு

அந்த ஆர்டர்களுக்கு 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை ஆடை உற்பத்தி கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து அமெரிக்காவுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அனுப்பி வைத்து வருவதாக தகல்கள் வெளியாகி உள்ளது. திருப்பூரில் ரூ.1,500 கோடி முதல் ரூ.2 ஆயிரம் கோடி வரையிலான ஆடைகள் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வரி பாதிப்பில் இருந்த சமாளிக்க, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு டியூட்டி டிராபேக் சலுகையை 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அவசரகால கடன் உதவி, வட்டிச்சலுகை போன்றவற்றை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), கோவை தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி சங்கங்களை ஒருங்கிணைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+