5,045 ரூபாய் கட்டினால் லட்சம் 1 லட்சம் ரூபாய் லாபம்.. திருப்பூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பயிர் இழப்பீட்டிற்கான காப்பீடு பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவ்டட தோட்டக்கலை துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாழை பயிருக்கு காப்பீட்டு தொகை பிரிமியமாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 45-ம், வெங்காயத்துக்கு ரூ.2 ஆயிரத்து 290-ம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் புனிதவேணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- எல் நினோ தாக்கத்தினால், இந்த ஆண்டில் ஏற்படும் வறட்சி, குறைவான மழைப்பொழிவு மற்றும் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் சேதத்தை ஈடுசெய்யும் பொருட்டு, வாழை மற்றும் வெங்காய பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

Tiruppur Horticulture Department announces insurance coverage for banana and onion crops

வாழை பயிருக்கு காப்பீடு செய்ய திருப்பூர் வட்டாரத்தில் பெருமாநல்லூர் உள்வட்டத்திற்குட்பட்ட மேற்குப்பகுதி, தொரவலூர், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், காளிபாளையம், பட்டம்பாளையம், சொக்கனூர், வள்ளிபுரம் ஆகிய கிராமங்களும், வெங்காய பயிர்களுக்கு மேற்கூறிய ஊர்களுடன் திருப்பூர் தெற்கு மற்றும் நல்லூர் உள்வட்டங்களுக்கு உட்பட்ட ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம், வீரபாண்டி, முதலிபாளையம், முத்தணம்பாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வாழை பயிருக்கு காப்பீட்டு தொகை பிரிமியமாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 45-ம், வெங்காயத்துக்கு ரூ.2 ஆயிரத்து 290-ம் செலுத்த வேண்டும். வாழைக்கான பிரிமியத்தொகையை செப்டம்பர் 15-ந்தேதிக்குள்ளும், வெங்காயத்துக்கான பிரிமியத்தொகையை வருகிற 31-ந்தேதிக்குள்ளாகவும் செலுத்த வேண்டும்.

காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல் (பயிர் மற்றும் சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பு பதிவு செய்திருத்தல் வேண்டும்), ரேஷன்கார்டு நகல், ஆதார் கார்டு நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் போன்றவை கொண்டு வரவும். மேலும் விவரங்களுக்கு பஜாஜ் பொது காப்பீட்டு நிறுவன அலுவலர் அல்லது திருப்பூர் வட்டார தோட்டக்கலைத்துறையினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு என்ன நன்மை

விவசாயிகள் காப்பீடு செய்தால் தான், எல் நினோ வறட்சி, குறைந்த மழைப்பொழிவு, அளவுக்கு அதிகமான மழை, காற்று அல்லது நோய் தாக்குதலால் வாழை அல்லது வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தால் அல்லது விளைச்சல் இல்லாமல் வீணாய் போனால் போட்ட பணம் திரும்ப வரும். உதாரணமாக நீங்கள் வாழைக்கு ஏக்கருக்கு 5,045 ரூபாய் கட்டினால், பயிர் சேதத்தின் போது ஏக்கருக்கு சுமார் ₹1 லட்சத்திற்கும் மேல் காப்பீட்டுத் தொகை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் வெங்காயத்திற்கு ₹2,290 கட்டினால், பல மடங்கு இழப்பீடு பெற முடியும். அரசே நேரடியாக கண்காணித்து வழங்குவதால் உங்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் இருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+