2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி விலை ரூ.7.70 லட்சமா.. சோஷியல் மீடியாவில் கிண்டல்.. எம்எல்ஏ விளக்கம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: 2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி விலை ரூ.7.70 லட்சமா என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து மீம்ஸ்கள் பறந்த நிலையில் அதை திறந்து வைத்த திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. குணசேகரன் விளக்கம் அளித்துள்ளதுடன், செலவு கணக்கையும் வெளியிட்டுள்ளார்.

திருப்பூர் 50வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே அவுட் பகுதியில் கைப்பிடி பம்ப்பில் நீர்மூழ்கி மோட்டார் பொருத்தி, நான்கு இடங்களில் குழாய் பொருத்தி மோட்டார் திட்டு அமைத்து 2000 லிட்டர் சின்டெக்ஸ். டேங்க் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திட்ட மதிப்பீடு 7.70 லட்சம் ரூபாய். இந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் பணிகள் குறித்து குறிப்பிடாமல் டேங்க் மீது செலவு என 7.70 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக வலைதளத்தில் வைரல்

சமூக வலைதளத்தில் வைரல்

வெறும் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி கட்ட ரூ.7.70 லட்சமா என்று கேட்காதவர்களே இல்லை. சமூக வலைதளங்களில் இந்த படம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. பலரும் இந்த சின்டெக்ஸ் கட்டியதில் ஊழல் நடந்திருக்கலாம் என வெளிப்படையாக குற்றம்சாட்டினர். பல மீம்ஸ்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நான் திறப்பாளர் மட்டுமே

நான் திறப்பாளர் மட்டுமே

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த திருப்பூர் தெற்கு அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன் ‘நான் திறப்பாளர் மட்டுமே' என விளக்கம் அளித்துள்ளார். நான் திறப்பு விழாவிற்கு மட்டும்தான் சென்றேன்.

குழாயைத்தான் திறந்து வைத்தேன்

குழாயைத்தான் திறந்து வைத்தேன்

தொட்டியின் அருகில் கூட செல்லவில்லை. குடிநீர் குழாய் வரும் இடத்தில் மட்டுமே சென்று திறந்து வைத்தேன். ஆகையால், எனக்கு தெரியவில்லை. அது எனது நிதியில் இருந்து கட்டப்படவில்லை. பொது நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது. நான் திறப்பாளர் என்கிற முறையில் சென்று திறந்து வைத்தேன்.

விவரத்தை வெளியிட்டார்

விவரத்தை வெளியிட்டார்

என்ன வேலைக்காக எவ்வளவு திட்டமதிப்பீடு செய்யப்பட்டது என்ற விளக்கத்தை தண்ணீர் தொட்டி அருகே வைக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன் என்றார். முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோவில் செலவு கணக்கையும் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+