பேரன் பேத்தி எடுத்தாச்சு.. இன்னுமா கேக்குது.. ஆத்திரமடைந்த மகள்.. கொன்று புதைத்த தாய்.. ஷாக்!

திருப்பூரில் மகளை கொன்று புதைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: "பேரன், பேத்தி எடுத்தும், இந்த வயசுல என்ன கள்ளக்காதல்" என்று ஆத்திரமடைந்து கேட்டார் மகள்.. இதனால் ஆவேசமான தாய், மகளை கத்தியால் குத்தி கொன்று, வீட்டுக்குள்ளேயே புதைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இது திருப்பூரில் நடந்த சம்பவம் ஆகும்.

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசிப்பவர் எஸ்தர் பேபி... 30 வயதாகிறது.. இவரது அம்மா பெயர் சகாய ராணி.. எஸ்தருக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. 4 குழந்தைகளும் உள்ளனர்.. ஆனால் 2014-ம் வருடம் கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு 4 குழந்தைகளையும் கூட்டி கொண்டு, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.

 tiruppur murder: mother killed daughter due to illegal love

இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன் எஸ்தர் பேபி மாயமாகிவிட்டார்.. மகளை காணோம் என்று பள்ளிக்கரணை போலீசில் புகார் தரப்பட்டது.. இது சம்பந்தமாக போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனரே தவிர எந்த க்ளூவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.. அதனால் வழக்கும் நிலுவையிலேயே இருந்து வந்தது.

தற்போது எஸ்தர் வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது... அம்மா வீட்டிற்கு வந்த எஸ்தர் பேபிக்கு, தன் தாய் பாண்டியராஜன் என்பவருடன் கள்ள உறவு வைத்துள்ளார் என்பது தெரியவந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்து தாயை தட்டிக்கேட்டார்.. இதனிடையே, மகளை பார்த்த பாண்டியராஜன், அவரையும் தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

எஸ்தர் இதற்கு மறுப்பு தெரிவித்து கடுமையாக சண்டை போட்டுள்ளார்.. இதனால் பயந்து போன பாண்டியராஜன் விஷயத்தை எஸ்தர் வெளியில் சொல்லிவிடுவார் என்று நினைத்து கொலை செய்ய திட்டம் போட்டார்.. இதனை சகாய ராணியிடம் சொல்லவும், அவரும் தன் மகளை கொலை செய்ய ஒப்புக் கொண்டார்.. அத்துடன் தன் தம்பி சேவியரையும் வரவழைத்தார்.. 3 பேரும் சேர்ந்து எஸ்தர் பேபியை கத்தியால் குத்தி கொலை செய்தனர்..

யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று தாங்கள் வசித்து வந்த வீட்டிலேயே மகளை புதைத்துவிட்டார் சகாய ராணி.. கொலை செய்து 4 நாட்களுக்கு பிறகுதான் மகளை காணோம் என்று புகார் தந்தார். திருப்பூரில் வேறு ஒரு சம்பவத்தில் சேவியர் கைதாகும்போதுதான், இந்த கொலை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.. விசாரணையில் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டார் சேவியர்.

எஸ்தரை புதைத்த இடத்தையும் அடையாளம் காட்டினார்.. 6 வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட எஸ்தரின் சடலம் டாக்டர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.. வெறும் எலும்புக்கூடாக இருந்தது.. அதை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. அம்மா சகாயராணி, கள்ளக்காதலன் பாண்டியராஜ், தற்போது கைதாகி உள்ளனர்.. பெற்ற மகளை அம்மாவே கொன்று வீட்டுக்குள் புதைத்தது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+