திருப்பூர் மைதிலி.. போயும் போயும் ரூ.2000 ஆசைப்பட்டு.. இப்ப வி.ஏ.ஓ ரேவதியும்.. பல்லிளிக்குது பல்லடம்
திருப்பூர்: திருப்பூரில் ஏற்கனவே பெண் அதிகாரிகள் பலர் கையும் களவுமாக சிக்கிய நிலையில், மீண்டும் ஒரு பெண் அதிகாரி, கைதாகி உள்ளார்.. பொறுப்பு மிக்க துறையில், அதிலும் அரசு பணியில் பதவி வகித்துவரும் நிலையில், இதுபோன்ற பெண்கள் கைதாவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. என்ன நடந்தது திருப்பூர் மாவட்டத்தில்?
தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் லஞ்ச சம்பவங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றன. அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கைதாகி வருகிறார்கள். இதற்கு திருப்பூர் மாவட்டமும் விதிவிலக்கல்ல.

4 நாட்களுக்கு முன்புகூட, திருப்பூர் மாவட்டத்தில் விஏஓ லஞ்சம் வாங்கி சிக்கியிருந்தார்.. அவிநாசி முருகம்பாளையத்தை சேர்ந்த 42 வயது கார்த்திகேயன், இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலத்தை இவர் வாங்கியிருக்கிறார்..
அந்த இடத்துக்கான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக, இடையபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு கார்த்திகேயன் விண்ணப்பித்திருந்தார்.
சிட்டாவில் பெயர் சேர்க்கை
ஆனால், பட்டா பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் பிரபு (44) மற்றும் அவரது உதவியாளர் கவிதா (36) இருவரும் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம்.. இதனை கொடுக்க விரும்பாத கார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் அளித்துவிட்டார். அதன்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, கார்த்திகேயனிடம் போலீஸார் கொடுத்துவிட்டார். இறுதியில், விஏஓ, அவரது உதவியாளர் கவிதாவுடன் கைதானார்.
இதோ இன்னொரு கைது நடவடிக்கை நடந்து, மாவட்டத்துக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. பல்லடம் தாலுகாவுக்குட்பட்ட கே.அய்யம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரேவதி.. இவருக்கு 44 வயதாகிறது.
சொத்து மதிப்பு சான்றிதழ்
இவரிடம் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஒப்பந்ததாரர் கதிர்வேல் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இதனை பெற்ற விஏஓ ரேவதி, சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால், லஞ்சம் வழங்க விரும்பாத கதிர்வேல், இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார்அளித்துள்ளார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழங்கிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை விஏஓவிடம், கதிர்வேல் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், விஏஓ ரேவதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, லஞ்ச பணத்தை பதுக்கி வைத்துள்ளாரா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதிர்ச்சி - கலக்கம்
சொத்து மதிப்பு சான்று வழங்க 15 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ கைது செய்யப்பட்ட சம்பவம் வருவாய்த்துறை வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதிலும் பெண் அதிகாரிகளே இப்படி லஞ்சம் வாங்கி கைதாவது, தமிழக மக்களுக்கு கவலையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இப்படித்தான் சமீபத்தில், திருப்பூரை சேர்ந்த ஜீவா என்பவர், வாரிசு சான்றிழ் கேட்டு, நல்லூர் வருவாய் ஆய்வாளரான மைதிலி என்பவரிடமும் அணுகியிருக்கிறார்.. அதற்கு 2,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார் மைதிலி.. முதலில் 7 ஆயிரம் கேட்டுள்ளார்.. பிறகு பேரம் பேசி 2 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், ஜீவா போலீசில் புகார் செய்யவும் மைதிலி கைதானார்.
திருப்பூர் மைதிலி
பெருந்துறையை சேர்ந்த மைதிலிக்கு 43 வயதாகிறது.. முதலில் வாரிசு சான்றிதழ் தருவதற்கு ஜீவாவிடம் 7 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.. ஒருபோதும் லஞ்சம் தர மாட்டேன் என்று ஜீவா சொல்லவும்தான், படிப்படியாக லஞ்சப்பணத்தை பேரம் பேசி, ரூ.2 ஆயிரமாக குறைத்தாராம்.
இத்தனை வருட காலம், பொறுப்பு மிக்க உயர்பதவியை வகித்துவிட்டு, வெறும் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி, பொதுவெளியில் அசிங்கப்பட்டார் இந்த பெண் அதிகாரி.. அதேபோல, இப்போது விஏஓ ரேவதியும் சிக்கியிருப்பது, வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications