திருப்பூர் நர்ஸின் தோள் மீது கை போட்டு சென்ற நபர்.. சிசிடிவியை பார்த்து ஆடிப்போன மதுரை.. அட கடவுளே
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகிலேயே இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. கடந்த 2 நாட்களுக்கு பிறகு நிஜமான குற்றவாளியையும் திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.. தாயும் இன்றி, தகப்பனும் இன்றி, 2 குழந்தைகளும் இன்று கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.. மதுரை அலங்காநல்லூரில் என்ன நடந்தது? திருப்பூர் மருத்துவமனையில் என்ன நடந்தது? இவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
திருப்பூர் பூம்புகார் நகர் குடியிருப்பு அருகிலுள்ள காலி இடத்தில் இளம் பெண் ஒருவர் கொடூரமாக இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தெற்கு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்றனர்.

அப்போதுதான் தலை, உடலில் கல்லை போட்டு அந்த பெண்ணை மர்மநபர்கள் கொடூரமாக கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அடையாளம் தெரியாத அளவுக்கு பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது.. எனவே, கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், அந்த பெண், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பல் மருத்துவமனையின் யூனிபார்மை அணிந்திருந்தார்.. எனவே, அந்த மருத்துவமனைக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சித்ரா என்பதும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது..
மருத்துவமனை நர்ஸ்
சித்ராவுக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு மதுரையில் திருமணம் நடந்துள்ளது.. கணவரின் பெயர் ராஜேஷ் கண்ணா .. இவரை விரும்பி காதலித்து திருமணம் செய்து கொண்டார் சித்ரா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்..
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதியினர் வாழ்வில் நாளடைவில் பிரச்சனைகள் வீசியது.. சமீபகாலமாகவே கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா, தன்னுடைய 2 குழந்தைகளுடன், அம்மாவுடன் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் திருப்பூருக்கு வந்துள்ளார். அங்கே தமிழ்நாடு தியேட்டர் பின்புறம் வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார்.. பிறகு அருகிலுள்ள தனியார் பல் மருத்துவமனையில் நர்ஸ் வேலையிலும் சேர்ந்துள்ளார்.
திருப்பூர் நர்ஸ் சித்ரா
இந்நிலையில், கடந்த புதன்கிழமை, மனைவி சித்ராவை சமாதானம் செய்து தன்னுடன் செல்வதற்காக ராஜேஷ் கண்ணா, மதுரையிலிருந்து திருப்பூருக்கு வந்தாராம்.. சித்ராவை எவ்வளவோ சமாதானம் செய்தும், ராஜேஷ் கண்ணாவுடன் செல்ல மறுத்துவிட்டாராம்.. இதனால் மருத்துவமனைக்கே சென்று தகராறு செய்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
இதனால் போலீசார் மருத்துவமனையிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், சித்ராவின் கணவர் ராஜேஷ் கண்ணா திடீரென தலைமறைவானார்.. இதனால், போலீசாரின் சந்தேகம் அவர் மீது குவிந்தது. உடனடியாக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு, சித்ராவின் கணவரை தேடும் பணி ஆரம்பமானது.
லுங்கி ஆண் - ஷாப்பிங்
அப்போதுதான், கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.. அதில் கொலை செய்யப்படுவதற்கு ஒருசில நிமிடங்கள் முன்பாக நர்ஸ் சித்ரா, ஒரு ஆணுடன் நடந்து செல்வது பதிவாகியிருந்தது.. அந்த நபர் லுங்கி அணிந்திருக்கிறார்.. சித்ராவின் தோள் மீது கை போட்டுக் கொண்டு, எதோ பேசியபடி நடந்து செல்கிறார்.. இறுதியில், அவர்தான் சித்ராவின் கணவர் என்பது உறுதியானது. மனைவி தொடர்ந்து தன்மீது கோபத்தில் இருந்ததால், அவரை சமாதானம் செய்தவாறு நடந்து செல்வதாக கணிக்கப்படுகிறது.
இதனிடையே, மதுரை அலங்காநல்லூர் பகுதியில் ராஜேஷ் கண்ணா பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்து சென்று, அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.. அவரிடம் உடனடியாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ராஜேஷ் கண்ணா போலீசில் பல்வேறு தகவல்களை சொல்லி உள்ளார்.
அதிர்ச்சி வாக்குமூலம்
அதாவது, கல்யாணம் ஆனது முதலே சித்ராவை கணவர் நிறைய சந்தேகப்பட்டாராம்.. இதனால் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.. பல முறை சித்ராவை அடித்து தாக்கி மண்டையையும் உடைத்ததாக தெரிகிறது.
இதனால்தான் மனம் நொந்துபோன சித்ரா, திருப்பூரில் பூக்கடை வைத்து நடத்தி வரும் தன்னுடைய அம்மா சீதாலட்சுமியின் வீட்டுக்கே குழந்தைகளுடன் வந்து தங்கியிருக்கிறார்.. இது ராஜேஷ் கண்ணாவுக்கு கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியிருக்கிறது. அதனால்தான், மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்வதுபோல் திருப்பூருக்கு வந்துள்ளார் கணவர்.
சம்பவத்தன்று கடைக்கு போகலாம் என்று சொல்லி சித்ராவை அழைத்து சென்றாராம்.. கலெக்டர் ஆபீஸ் அருகிலேயே, இருட்டான பகுதியில் சித்ராவை கொன்றுள்ளார் கணவர்.. அதுமட்டுமல்ல, தன்னுடைய 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள தன்னுடைய வீட்டிற்கும் அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் மறுநாளே போலீசாரிடம் சிக்கிவிட்டார்.












Click it and Unblock the Notifications