திருப்பூர் ரூட்டில் செல்லும் 5 ரயில்களில் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு புத்தாண்டு சர்ப்ரைஸ் இதுதான்
திருப்பூர்: சென்னை ரயில்களில் இனி ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கும் கட்டண அடிப்படையில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட படுக்கை விரிப்பு வசதி கிடைக்கும். விரிப்பு, தலையணை, கம்பளி, கை துண்டு போன்ற வசதிகள் அடங்கும் இந்த திட்டம் ஜனவரி 1 முதல் 10 ரயில்களில் அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்துதான் மற்றொரு சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை பிரிவில் ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக புதிய வசதி ஒன்று 10 நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இதன்மூலம் இனி ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளும் கட்டண அடிப்படையில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட படுக்கை விரிப்புகளை பெற முடியும்.
தெற்கு ரயில்வே சர்ப்ரைஸ்
தெற்கு ரயில்வே முதலில் 10 ரயில்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்றும் இதன் மூலம் பயணிகள் பயணத்தின் போது சுகாதாரமான மற்றும் சௌகரியமான படுக்கை வசதிகளை அனுபவிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தது.
கட்டணத்தை செலுத்தி, சுத்தமான மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட படுக்கை வசதிகளை பயணிகள் பெற்றுக் கொள்ளலாம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியில் விரிப்பு, தலையணை, கம்பளி, கை துண்டு போன்ற அடிப்படை சேவைகளும் அடங்கும்.
AC ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகள்
ஜனவரி 1 முதல் AC ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்த முடியும்... பயணிகள் முன்பதிவு செய்யும் போது, இந்த வசதி தேவையா? என கேட்கப்படும். தேவையானவர்கள் மட்டும் தேர்வு செய்து, கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்பு மற்றும் தலையணை போன்ற வசதிகளை பெற்றுக் கொள்ளலாம். இது கட்டாயம் அல்ல; விருப்பப்பட்ட பயணிகளுக்கே வழங்கப்படும்.
இதுவரை படுக்கை விரிப்புகள் AC கிளாஸ்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்ததால், நீண்ட தூர பயணம் செய்யும் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகள் இதைப் பெரிதும் வரவேற்க துவங்கிவிட்டார்கள்..
திருப்பூர் ரூட்டில் 5 ரயில்கள்
இந்நிலையில், சென்னைக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்த வசதி தற்போதும் மேலும் சில மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே மேலும் சில முக்கிய ரயில்களை இந்த லிஸ்ட்டில் சேர்த்துள்ளது.. இதில் மேட்டுப்பாளையம் - கோவை (நீலகிரி எக்ஸ்பிரஸ்), திருவனந்தபுரம் - சென்னை சூப்பர்பாஸ்ட், ஆலப்புழா - சென்னை, மங்களூரு - சென்னை எழும்பூர் மற்றும் திருவனந்தபுரம் - சென்னை சூப்பர்பாஸ்ட் போன்ற 5 முக்கிய ரயில்கள் அடக்கமாகும்.
கோவை, திருப்பூர் போன்ற மேற்கு மண்டல மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் ரயில்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் பயணிகள் உச்சக்கட்ட சந்தோஷத்தில் உள்ளனர்.
புத்தாண்டு சர்ப்ரைஸ்
ஏனென்றால், இதுவரை முதல் வகுப்பு AC இரண்டாம், மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் மட்டுமே படுக்கை விரிப்பு, தலையணை வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது ஸ்லீப்பர் வகுப்பிலும் இந்த வசதியை விரிவுபடுத்தியதன் மூலம், அனைத்து பயணிகளும் சுகாதாரமான மற்றும் வசதியான படுக்கை வசதியை அனுபவிக்க முடியும்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "இந்த திட்டம் பயணிகளின் நன்மைக்காக உருவாக்கப்பட்டது, நீண்ட தூர பயணங்களில் பயணிகள் மேலும் சுகாதாரமான மற்றும் சௌகரியமான அனுபவத்தை அனுபவிப்பார்கள். இதனால் பயணிகள் பயணத்தில் மகிழ்ச்சியுடன் மற்றும் நம்பிக்கையுடன் பயணம் செய்ய முடியும்.
பயணிகள் பயணத்தின்போது, கட்டணத்தை செலுத்தி, விருப்பப்பட்ட படுக்கை வசதிகளை பெற முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications