Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலிரவில் மாத்திரை பால் குடித்து விழுந்த மாப்ளை.. யாரிந்த பெண்? 50 பேரை மணந்த திருப்பூர் சத்யா போல

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருமண மோசடிகள் சமீபகாலமாக பெருகி வருகிறது.. இதில் வசதி படைத்தவர்களை குறித்து , திருமண மோசடி செய்வதும், அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் கொள்ளை போவதும் அதிகரித்து வருவது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. குடும்ப மானம் பறிபோய்விடும் என்று பலரும் இதுகுறித்து புகார் தராமல் இருப்பதால், மோசடிப்பேர்வழிகளுக்கு இதுவே தைரியத்தை தந்து விடுகிறது. இதோ மீண்டும் ஒரு மோசடி சம்பவம், ஆக்ராவில் நடந்துள்ளது.

திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த 30 வயது பேக்கரி ஓனர், மேட்ரிமோனியில் பெண் தேடி வந்துள்ளார்.. இதனையறிந்த 30 வயது பெண் என்ற பெண், பேக்கரி ஓனரை திருமணம் செய்ய முடிவு செய்தார்..

Tiruppur Aadhaar card First Night

நகை, பணம் மோசடி

இந்த சத்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.. ஆனால், திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து, அவர்களை திருமணம் செய்து, நகை, பணம் மோசடிகளை செய்வதே சத்யாவின் வாடிக்கையாகும்.

சத்யாவின் விவரம் அறியாமல் பேக்கரி ஓனரும் திருமணம் செய்து கொண்டார்.. அடுத்த சில நாட்களில், சத்யா பெயரை தன்னுடைய ரேஷன் அட்டையில் பதிவதற்காக சத்யாவின் ஆதார் அட்டையை பார்த்தபோது, அதில், கணவர் பெயர் இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

50 பேரை ஏமாற்றினாரா சத்யா

இதனால் அதிர்ச்சி அடைந்த பேக்கரி ஓனர், சத்யாவை பற்றின விசாரணையில் இறங்கினார்.. அப்போதுதான், அதிகாரிகள், சர்வேயர், டிஎஸ்பி, சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத இளைஞர்கள், தொழிலதிபர்கள் , அரசியல்வாதிகள், ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் என 55 பேரை ஏமாற்றி சத்யா திருமணம் செய்துள்ளதாகவும், லட்சக்கணக்கில் இவர்களிடம் நகை, பணத்தை சத்யா பறித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

அந்தவகையில், சத்யாவை சிக்க வைக்க காரணமாக இருந்ததே அவரது ஆதார் கார்டுதான். அதேபோன்ற சம்பவம்தான், ஆக்ராவிலும் தற்போது நடந்துள்ளது.. ஆக்ராவை சேர்ந்த இளம்பெண் ஏழைப் பின்னணியை கொண்டவர்.. இவருக்கு தாய் தகப்பன் இல்லை.. எனவே, பெண்ணின் தாய்மாமா, அத்தை இருவரும்தான், இந்த பெண்ணை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள்.. அந்தவகையில், அங்குள்ள இளைஞர் ஒருவருக்கு திருமணமும் பேசி முடித்துள்ளனர்.

வசதியில்லாத மணப்பெண்

மணப்பெண் வீட்டில் வசதியில்லை என்பதால், திருமணத்தை மணமகன் வீட்டினரே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளனர்.. அனைத்து சடங்குகளுடனும், கோலாகலமாக திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.

இதையடுத்து, அன்றைய தினம் மாமியாருக்கும், மணமகனுக்கும் மயக்க மருந்து கலந்த பால் எடுத்து வந்து தந்துள்ளார் மணமகள்.. இதை குடித்ததுமே இருவருமே மயங்கி விழுந்துள்ளனர்.. இதையடுத்து, திருமணத்துக்கு போடப்பட்ட நகை, பணம், மாப்பிள்ளையின் மோதிரம், மாமியாரின் காலில் உள்ள கொலுசு உள்ளிட்ட நகைகளை பறித்துக் கொண்டார் மணமகள்..

வாசலில் காத்திருந்த மர்ம நபர்

அதற்குள் வீட்டின் வாசலில் பைக்கில் தயாராக காத்திருந்த நபருடன் கொள்ளையடித்த பணம், தங்கம் , வெள்ளி பொருட்களுடன் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1.30 லட்சத்திற்கும் மேல் என்கிறார்கள்.

மறுநாள் காலையில், வீட்டிலுள்ள பொருட்கள், நகை, பணம் காணாமல் போனதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.. இதையடுத்து, உடனடியாக போலீசில் புகார் தரப்பட்டது.. இந்த புகாரின் பேரில் போலீசாரும் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அதில் மணமகள் பைக்கில் ஒருவருடன் தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது.. இதையடுத்து, அந்த பைக்கின் நம்பரை வைத்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

போலி ஆதார் கார்டு

அதேபோல, மணமகளின் ஆதார் அட்டையும் ஆய்வு செய்யப்பட்டது.. அப்போதுதான் அது போலியானது என்பதும், கல்யாணத்தில் கலந்து கொண்ட, மாமா, அத்தை உள்ளிட்ட உறவினர்கள் அனைவருமே ஜோடிக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது..

எனவே, இந்த மோசடியில் மிகப்பெரிய கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.. எனவே, குற்றவாளிகளை கைது செய்தால்தான், அவர்களது பிற மோசடிகளும் தெரியவரும் என்பதால், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+