Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் ஜவுளித்துறை அதிர்ச்சி: அமெரிக்க ஒப்பந்தத்தால் ரூ 100 கோடி காடா துணிகள் தேக்கம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: அமெரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தால் அந்நாட்டிற்கு இறக்குமதி வரி 19 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.. இது சர்வதேச சந்தையில் பெரும் போட்டியை உருவாக்கி, இந்திய ஜவுளித் துறையில் குறிப்பாகத் திருப்பூரின் ஏற்றுமதி வாய்ப்புகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.. தமிழக ஜவுளித் துறைக்கு ஒரு நற்செய்தி வந்த சில நாட்களிலேயே இத்தகைய சவால் எழுந்துள்ளது திருப்பூரின் ஏற்றுமதியாளர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது..

திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் சாதாரண விசைத்தறிகளும், சுமார் 20 ஆயிரம் நவீன நாடா இல்லா விசைத்தறிகளும் இயங்கி வருகின்றன.

Tiruppur Textile Hub US-Bangladesh Trade Deal Rs 100 Crore Gulf War 100

இவற்றின் மூலம் தினசரி சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.. இந்தப் பிரிவைச் சார்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.. தற்போது நிலவி வரும் சர்வதேச அரசியல் சூழல் இவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது..

திருப்பூருக்கு குட் நியூஸ்

வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாகப் பன்னாட்டுச் சந்தையில் ஜவுளித் துணிகளுக்கான தேவை பெருமளவு குறைந்துள்ளது.. வெளிநாட்டு வியாபாரிகள் புதிய ஆர்டர்களை வழங்கத் தயக்கம் காட்டி வருகின்றனர்..

ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டுத் தயார் நிலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் தற்போது தேக்கமடைந்துள்ளன.. திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான துணிக் கட்டுகள் விற்பனையாகாமல் குடோன்களில் தேங்கிக் கிடக்கின்றன.. இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது..

காடா துணிகள் தேக்கம்

இதற்கு பின்னால் இருக்கும் மற்றொரு முக்கியக் காரணி நூல் விலை உயர்வு ஆகும்.. கடந்த சில வாரங்களில் மட்டும் நூல் விலை கிலோவிற்கு 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.. ஆனால் அதற்கு ஈடாக உற்பத்தி செய்யப்படும் துணிகளின் விலை சந்தையில் உயரவில்லை..

ஒரு மீட்டர் துணி உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், பழைய விலையிலேயே விற்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் உற்பத்தியாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.. இதனால் பல விசைத்தறி உரிமையாளர்கள் உற்பத்தியைக் குறைக்கவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தவோ முற்பட்டுள்ளனர்..

பணப்பரிவர்த்தனைகள்

மேலும் தற்போதைய தேர்தல் நடைமுறைகள் காரணமா பணப் பரிவர்த்தனைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.. ஜவுளித் தொழில் என்பது பெரும்பாலும் ரொக்க பரிவர்த்தனைகளைச் சார்ந்தே இயங்குவதால், வியாபாரிகளால் குறித்த நேரத்தில் பணத்தைச் செலுத்தவோ அல்லது கொள்முதல் செய்யவோ முடிவதில்லையாம்.

மார்ச் மாதம் என்பது வருடாந்திர கணக்கு முடிக்கும் காலம் என்பதால், நிதி நெருக்கடி இன்னும் தீவிரமாகியுள்ளது.. இத்தகைய காரணங்களால் ஜவுளி சந்தையில் பணப்புழக்கம் குறைந்து வர்த்தகம் மந்தமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது..

மத்திய அரசுக்கு கோரிக்கை

ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையில், நூல் விலையைக் கட்டுப்படுத்தப் பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்கு உடனடி தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்ல. ஜவுளி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை குறையாத பட்சத்தில், உற்பத்திச் செலவை கட்டுப்படுத்த முடியாது என அவர்கள் அஞ்சுகின்றனர்.. 100 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கம் அடைந்துள்ளதால், சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.. இத்தகைய இக்கட்டான சூழலில் இருந்து ஜவுளித் தொழிலை மீட்க அரசுத் தரப்பிலிருந்து உடனடி நிவாரண நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+