திருப்பூர் டூ திருச்சூர்.. கணவனுடன் ஜாலியாக இருந்த கள்ளக்காதலியை கூலிப்படைக்கு விருந்தாக்கிய மனைவி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மனைவி தேவி, தனது கணவருடன் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த கள்ளக்காதலையைக் காரில் கடத்திச் சென்று, கூலிப்படை மூலம் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். இதையடுத்துத் தேவி உட்பட 5 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதாகும் குணசேகரன், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி தேவி (36). குணசேகரனுக்கும், கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் நிலம்பூரைச் சேர்ந்த 38 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இரண்டு பேரும் தனியாகச் சந்தித்துத் தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.

Tiruppur to Thrissur The gift a wife gave to the woman who was having a fling with her husband

ஒரு கட்டத்தில் இது தேவிக்குத் தெரியவந்தது. இந்தக் கள்ளக்காதலைத் தேவி கடுமையாகக் கண்டித்தார். ஆனால், கள்ளக்காதலைக் கைவிட மறுத்த குணசேகரன், அவர்களது உறவைத் தொடரவே விரும்புவதாகக் கூறி மறுத்துவிட்டார். இந்த நிலையில் குணசேகரன் தனது கள்ளக்காதலியுடன் திருச்சூரில் உள்ள விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். கணவர் தனது கள்ளக்காதலியுடன் வெளியே சுற்றித் திரிவதைத் தேவி தெரிந்துகொண்டார். கணவர் எங்கு இருக்கிறார் என அவரது கைப்பேசி இருப்பிடத்தைக் கொண்டு, அவர்கள் தங்கியிருந்த இடத்தை தேவி அறிந்தார்.

இதையடுத்துத் தேவி, 4 பேர் அடங்கிய கூலிப்படையை ஏவி, தனது கணவரையும் அவரது கள்ளக்காதலியையும் கடத்தி வருமாறு கூறினார். அதன்படி, 4 பேருடன் தேவியும் திருச்சூருக்குச் சென்றுள்ளார். அந்த விடுதியில் தங்களைப் போலீசார் என்று கூறி, குணசேகரன் தங்கியிருந்த அறைக்குச் சென்றனர். அங்கு குணசேகரன் தனது கள்ளக்காதலியுடன் இருந்தார். உடனே இரண்டு பேரையும் அவர்கள் தாக்கி, வலுக்கட்டாயமாக அறையிலிருந்து இழுத்து வந்து காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.

அவ்வாறு செல்லும்போது தேவி ஏவியதன் பேரில், குணசேகரனைக் கூலிப்படையினர் கடுமையாகத் தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து குணசேகரனின் கள்ளக்காதலியைக் கூலிப்படையினர் வேறொரு காரில் கடத்திச் சென்றனர். அப்போது அவரை 4 பேர் ஒருவர் பின் ஒருவராகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கூலிப்படையினரிடமிருந்து தப்பிய அந்தப் பெண், திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் திருச்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோதுதான், தேவி கூலிப்படையை ஏவிக் கணவருக்கும் அவரது கள்ளக்காதலிக்கும் பாடம் புகட்டியது தெரியவந்தது. இது தொடர்பாகக் கூலிப்படைத் தலைவரான தாமஸ், ரகுபதி, பால்ராஜ், சங்கர் மற்றும் குணசேகரனின் மனைவி தேவி ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+