படிச்சாகணும்.. டீச்சராகணுமே.. கடகடவென கறி வெட்டி கலக்கும் சண்முகப் பிரியா!

கறி வெட்டி படித்து வருகிறார் கல்லூரி மாணவி ஒருவர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆசிரியர் கனவுடன் கறி வெட்டும் மாணவி சண்முகப்பிரியா- வீடியோ

    திருப்பூர்: "நான் கறி வெட்றதை யார் பார்த்து கிண்டல் பண்ணாலும் கவலையில்லை.. எனக்கு படிச்சாகணும்.. டீச்சர் ஆகியே ஆகணும்" என்று கறி வெட்றதாலோ என்னவோ, வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக சொல்கிறார் இந்த மாணவி!

    திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு, கொங்கணகிரி பகுதியில் உள்ள அந்த கறிகடை படு பிசியாக இருக்கிறது. கஸ்டமர்கள் கேட்பதை கடகடவென வெட்டித் தள்ளி பேக் பண்ணி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த சின்னப் பெண். அவர்தான் சண்முகப்பிரியா.

    திருப்பூர் எல்ஆர்ஜி அரசு பெண்கள் கல்லூரியில், எம்எஸ்சி. கெமிஸ்ட்ரி முதலாமாண்டு படிக்கிறார். 2 தம்பிகள் இருக்கிறார்கள். அப்பா கறி வெட்டும் தொழில் செய்கிறார்.

    சிக்கல்

    சிக்கல்

    இவருக்கு வருமானம் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. யாருக்காவது வீட்டில் கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போய்விட்டாலும் நிலைமை சிக்கல்தான். அதனால வர்ற வருமானம் முழுசும் குடும்பத்துக்கே போய்விடுகிறது.

     டீச்சர் கனவு

    டீச்சர் கனவு

    ஆனால் சண்முகப்பிரியாவுக்கோ சின்ன வயசில் இருந்தே டீச்சர் ஆகணும்னு ஆசை. அப்பாவுக்கு கம்மி வருமானம் வந்ததால், தனக்கான படிப்பு செலவை தானே ரெடி பண்ணிக்கலாம்னு முடிவுக்கு வந்துட்டார். அதுக்காக அப்பா கூட சேர்ந்து கறி கடையில் கறி வெட்டுகிறார். அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையே ரொம்ப பிஸியா இருக்கும். அந்த சமயத்தில்தான் சண்முகப்பிரியா கடையில் கெத்து காட்டுகிறார்.

    கீறல்கள்

    கீறல்கள்

    முதலில் 'என்னடா இது கறிக்கடையில நின்னு இப்படி கறி வெட்டுறோமேன்னு இருந்துச்சாம்.. ஆனா இதெல்லாம் பார்த்தால் முடியுமா என்ன? டீச்சர் ஆக வேணாமா.. அதான் கோதாவில் குதிச்சிட்டார். ஆரம்பத்தில் கறி வெட்டும்போது, ரொம்ப கஷ்டமா இருந்திருக்கு. விரல்களில் கீறல்கள், ரத்தங்கள் தெறித்து.. அதற்கு பிறகே சரியாக கறி வெட்ட கத்து கொண்டுள்ளார்.

     படிப்பு.. படிப்பு..

    படிப்பு.. படிப்பு..

    இப்போ கறி வெட்டுறதில் செம ஸ்பீடு.. வர்ற கஸ்டர்மர்கள் கிட்ட ரொம்ப சகஜமாக பேசிட்டு வெட்ற அழகே அலாதிதான். கறிக்கடைக்கு எப்போ கஸ்டமர்கள் இல்லையோ, உடனே புஸ்தகத்தை வெச்சு படிக்க ஆரம்பிச்சிடறார் சண்முகப்பிரியா.

     வருங்கால டீச்சர்

    வருங்கால டீச்சர்

    முதல்ல டீச்சர் ஆகணும், அப்புறம், தம்பியை மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்க வைக்கணும்ன்னு ஒரு பெரிய கனவு லிஸ்ட்டே வைத்திருக்கிறார். இதில முக்கியமான மேட்டர் என்னன்னா, சண்முகப்பிரியா கறி வெட்டுறதை அவருடைய ஃப்ரண்ட்-ங்க யாருமே கிண்டல் செய்யலையாம். சூப்பர்ன்னுதான் சொல்லி என்கரேஜ் பண்றாங்களாம். ஒரு பக்கம் கறி வெட்டுதல், மறுபக்கம் படிப்பு என செம பிசியாக இருக்கிறார் இந்த வருங்கால டீச்சர் சண்முகப்பிரியா!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+