திருப்பூரில் தக்காளிக்கு திடீர் மவுசு.. ரூ.350க்கு எகிறிய விலை.. தர்மபுரியில் என்னாச்சு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி விலை மீண்டும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கிவிட்டது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.350 வரை விற்பனையாகிறது. ஆனால், இந்த விலை உயர்வுக்கு பின்னால் இருக்கும் விவசாயிகளின் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது.. ஒரு பக்கம் தக்காளிக்கு விலை கிடைக்கிறது.. இன்னொரு பக்கம் அந்த தக்காளியை காப்பாற்ற தண்ணீரையே விலைக்கு வாங்க வேண்டிய நிலைமையும் உள்ளது.. சுருக்கமாக பார்ப்போம்.

திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், போதிய மழை இல்லாததால் பல இடங்களில் தக்காளி செடிகள் காய்ந்து விட்டன.

Tomato Price In Tiruppur

திருப்பூர் தக்காளி விலை

இதில், பொங்கலூர் பகுதியில் வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி 10 நாட்களுக்கு முன்பு அறுவடை செய்யப்பட்டு வந்தது. அப்போது அறுவடை சீசன் முடியும் தருவாயில் இருந்தது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக புதிதாக தக்காளி நடவு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்திருந்தது... போதாக்குறைக்கு வெயில் வாட்டியதால் தக்காளி விளைச்சலும் சரிந்திருந்தது.

இதன் காரணமாகவே, அப்போது தக்காளி விலை மெல்ல உயரத் தொடங்கியது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.150 வரை விற்பனையானது. சில்லறை விற்பனை கடைகளில் 6 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதாவது ஒரு கிலோ தக்காளி சுமார் ரூ.16 முதல் ரூ.17 வரை என்ற அளவில் இருந்தது.

தக்காளி சாகுபடி

இந்த நிலையில், இப்போது தக்காளி விலை மேலும் உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ள பல இடங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் செடிகள் காய்ந்து வருகின்றன. இதனால் தக்காளி சீசன் முடிவை நோக்கி செல்கிறது. சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்தும் குறைந்துள்ளதால், 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி அதிகபட்சமாக ரூ.350 வரை விற்பனையாகிறது.

Tomato Price In Tiruppur

10 நாட்களுக்கு முன்பு ரூ.150-க்கு விற்பனையான ஒரு பெட்டி தக்காளி தற்போது ரூ.350 வரை உயர்ந்துள்ளது. அதாவது விலை டபுளாகி உள்ளது.. விளைச்சல் குறைவு, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சீசன் முடியும் நிலை போன்றவையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன... மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் அளவு குறைந்துள்ளதால் விலை மேலும் உயருமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட விவசாயி

ஆனால், தக்காளி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கிறதா என்ற கேள்வியும் இங்கு உள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை நாம் தொடர்பு கொண்டு, இதுகுறித்து நாம் கேட்டபோது, தக்காளி சாகுபடியில் தற்சமயம் நிலவும் சிக்கல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்..

"தக்காளிக்கு நல்ல விலை கிடைப்பது இப்போது எங்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியை தருகிறது.. ஆனால், நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிட்டதால், பயிரைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஒரு லோடு தண்ணீருக்கு ரூ.1200 முதல் ரூ.1300 வரை செலவு செய்து, லாரி மூலம் தண்ணீரை வாங்கி வந்து தக்காளி பயிருக்கு ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. இதனால் தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தாலும், கிடைக்கும் பணத்தில் பெரும் பகுதி தண்ணீருக்கான செலவுக்கே சென்று விடுகிறது.

தக்காளிக்கு விலை கிடைப்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், தண்ணீர் இல்லாமல் பயிரைக் காப்பாற்றுவது மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது.. தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் இந்த நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ஒரே வழி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் மற்றும் பாசனத் திட்டங்களை அரசு விரைந்து முழுமையாக செயல்படுத்த வேண்டும்" என்று விவசாயிகள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்

ஒருவேளை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் மற்றும் பாசனத் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு, விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் கிடைத்தால், தர்மபுரி போன்ற நீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் தக்காளி உள்ளிட்ட பயிர்களை தொடர்ந்து சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு நிறையவே அதிகரிக்கும்.

முக்கியமாக, நிலத்தடி நீரை நம்பியே பயிரை காப்பாற்ற வேண்டிய நிலை குறைந்து, தண்ணீரை விலைக்கு வாங்கும் செலவும் குறையலாம். இதனால் தக்காளி சாகுபடியை மேற்கொள்வதில் நம்பிக்கை ஏற்படுவதுடன், சாகுபடி பரப்பும் அதிகரிக்க வாய்ப்பும் உள்ளது என்பது தர்மபுரி விவசாயிகளின் நம்பிக்கையாகும்.

நல்ல செய்தி + கவலை செய்தி

இருந்தாலும் வெறும் 10 நாளில் ஒரு பெட்டி தக்காளி ரூ.150-ல் இருந்து ரூ.350 ஆக உயர்ந்திருப்பது, பொதுமக்களுக்கும் கவலையையே தந்து வருகிறது.. சந்தை நிலவரத்தை பார்க்கும்போது இது விவசாயிகளுக்கு நல்ல செய்தியாக தெரிந்தாலும், அந்த தக்காளியை காப்பாற்றவே ஒரு லோடு தண்ணீருக்கு 1200 முதல் 1300 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை இருப்பதுதான் விவசாயிகளின் உண்மையான வேதனையாக உள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+