டாப் 5 பணக்கார தமிழக மாவட்டங்கள் பாருங்க: தனிநபர் வருமானத்தில் முதலிடம் திருப்பூர், செங்கல்பட்டா?
திருப்பூர்: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சார்ந்து அமையாமல், மாநிலம் முழுவதும் பரவலாகப் பரவியிருப்பதே அதன் தனிச்சிறப்பாகும்.. ஒரு மாவட்டத்தின் செழிப்பைத் தீர்மானிப்பதில் தனிநபர் வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.. அந்தவகையில் சில மாவட்டங்கள் டாப்பில் உள்ளன.. அவைகளை பற்றி பார்ப்போம்.
சமீபத்திய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தமிழகத்தின் முதல் ஐந்து பணக்கார மாவட்டங்களின் பட்டியல் பல சுவாரசியமான தகவல்களை தந்துள்ளன..

திருப்பூர் வர்த்தகம்
குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்கள் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளால் தமிழகத்தின் பொருளாதார முகங்களாகத் திகழ்கின்றன.. ஒரு மாநிலத்தின் உண்மையான செழிப்பை அங்குள்ள மக்களின் தலா வருமானமே தீர்மானிக்கிறது என்பதால், இந்தத் தரவுகள் மிகவும் முக்கியமானவை..
இந்த வரிசையில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியாவின் பின்னலாடை தலைநகரான திருப்பூர்.. 'டாலர் நகரம்' என்று அழைக்கப்படும் திருப்பூரின் ஒவ்வொரு வீதியும் ஒரு சிறு தொழிற்சாலையாகவே இயங்கி வருவது வியப்பிற்குரியது.. லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் வழங்கி, உலக நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் இம்மாவட்ட மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 4.37 லட்சமாக உயர்ந்துள்ளது..
பணக்கார மாவட்டங்கள்
இதனை தொடர்ந்து நான்காவது இடத்தில், தென்னிந்தியாவின் முட்டை கேந்திரமான நாமக்கல் மாவட்டம் உள்ளது.. கோழி வளர்ப்பு, லாரி பாடி கட்டமைப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் அசைக்க முடியாத ஆதிக்கம் செலுத்தும் இந்த மாவட்ட மக்களின் சராசரி வருமானம் ரூ. 4.74 லட்சமாகப் பதிவாகியுள்ளது..
அனைவரும் முதலிடத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்த தமிழகத்தின் தலைநகரான சென்னை, இப்பட்டியலில் ஆச்சரியப்படும் விதமாக 3ம் இடத்தையே பிடித்துள்ளது.. ID ஹப் மற்றும் முதன்மையான வணிக மையமாக திகழும் சென்னையில் மக்களின் சராசரி வருமானம் ரூ. 5.77 லட்சமாக உள்ளது..
ஐடி ஹப் - வர்த்தகம்
இரண்டாம் இடத்தை, ஆன்மீகமும் பொருளாதாரமும் கைகோர்த்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் பெற்றுள்ளது.. பட்டுச் சேலை வணிகம் மற்றும் வளர்ந்து வரும் நவீன தொழிற்சாலைகள் மூலம் இங்குள்ள மக்களின் சராசரி வருமானம் ரூ. 7.39 லட்சமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது..
இறுதியாக, தமிழகத்தின் மிகப்பணக்கார மாவட்டமாக மகுடம் சூடுகிறது செங்கல்பட்டு மாவட்டம்.. மின்னணு சாதன உற்பத்தி, ஆட்டோமொபைல் துறையின் அசுர வளர்ச்சி மற்றும் பிரம்மாண்டமான ஐடி பூங்காக்களின் சங்கமமாகத் திகழும் செங்கல்பட்டு, ரூ. 7.47 லட்சம் சராசரி வருமானத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது..
சென்னைக்கு மிக அருகாமையில் இருப்பதும், புதிய தொழில் முதலீடுகள் இங்கு அதிக அளவில் குவிவதும் இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.. மொத்தத்தில் சிறந்த சாலைகள், விமான நிலையம், துறைமுக வசதி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்ற உள்கட்டமைப்புகள் தொழில் முனைவோரை ஈர்ப்பதால், இம்மாவட்டங்கள் தமிழகத்தின் பொருளாதார இயந்திரங்களாகச் செயல்பட்டு வருகின்றன..!!
தனி நபர் வருமானம் - உற்பத்தி
தமிழகத்தின் இந்த டாப் 5 பணக்கார மாவட்டங்களின் பட்டியல் மற்றும் அதன் பொருளாதாரத் தரவுகள் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பாதையைத் துல்லியமாக தெரிந்துகொள்ள முடிகிறது..
இந்த பட்டியலால் முதலீட்டாளர்கள் எந்தெந்த மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளை தொடங்கலாம் என்பதையும், வேலை தேடுபவர்கள் அதிக வருமானம் தரக்கூடிய ஐடி மற்றும் உற்பத்தித் துறைகள் எங்கு செறிந்துள்ளன என்பதையும் எளிதாக கண்டறியலாம்..
மேலும், அரசு நிர்வாகத்திற்கு எந்தெந்தப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களை எவ்வாறு முன்னேற்றலாம் என்ற திட்டமிடலுக்கு இது ஒரு வழிகாட்டியாக அமைகிறது.. குறிப்பாக, தனிநபர் வருமானத்தின் உயர்வு மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வாங்கும் திறனைப் பிரதிபலிப்பதால், வணிக நிறுவனங்கள் தங்கள் சந்தையை விரிவாக்கம் செய்ய இந்தப் புள்ளிவிவரங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன..!!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications