தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எதிர்ப்பு.. விலகிய 100க்கும் மேலான தவெக நிர்வாகிகள்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரம் தொகுதியில் இருந்து தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுக பக்கம் சாய்ந்திருக்கின்றனர். இதன் பின்னணியில் தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளராக சத்தியபாமா அறிவிக்கப்பட்டதே காரணமாக சொல்லப்படுகிறது. தொகுதி நிர்வாகிகளுடன் கூட ஆலோசிக்காமல் தலைமை முடிவு எடுத்ததே விலகலுக்கு காரணம் என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏ-க்களாக இருந்த மரதகம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தற்போது இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களாக இருவரும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

Bypoll 2026

இது தவெகவினர் மத்தியிலேயே அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. புதிதாக கட்சிக்கு வந்தவர்களுக்கு உடனடியாக வாய்ப்பு கொடுப்பதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமாவுக்கு தொகுதியில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனை அறிந்தே சத்தியபாமா கோயில் கோயிலாக செல்ல தொடங்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சத்தியபாமாவை வேட்பாளராக அறிவிப்பதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் தவெக தலைமை கொஞ்சம் கூட நிர்வாகிகளின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை. இதனால் சத்தியபாமாவை வேட்பாளராக அறிவித்த பின், தாராபுரம் தொகுதி நிர்வாகிகள் பலரும் அதிமுக பக்கம் சாய்ந்திருக்கின்றனர்.

தவெகவில் குண்டடம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபாலன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வபிரகாஷ் உள்ளிட்ட 100க்கும் அதிகமான நிர்வாகிகள் அதிமுக பக்கம் சென்றுவிட்டனர். தங்களின் கோரிக்கைகளை தலைமை கொஞ்சம் கூட பரிசீலைனை செய்யாததே கட்சி மாறியதற்கு காரணம் என்று அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தொகுதியில் அதிமுக வலுவாக இருப்பதோடு, சத்தியபாமாவுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இருப்பினும் சீட் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், வேறு வழியின்றி தவெக தலைமை சீட் கொடுத்துள்ளது. ஆனால் தாராபுரம் தொகுதியில் வெல்ல முடியுமா என்ற பீதியுடன் தான் ஆளும் தரப்பு இருப்பதாக முனுமுனுப்புகள் அதிகரித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+