ஆறுகளில் நுரை பொங்க காரணமே இதுதான்.. வித்தியாசமான ரீசனை சொன்ன தவெக அமைச்சர் ராஜீவ்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில், சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை அமைச்சர் ராஜீவ் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்.. ஆறுகளில் நுரை ஏற்படுவதற்கான காரணத்தை அவர் விளக்கினார். இது குறித்து அவர் பேசிய கருத்துக்கள் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

சோப்பு, ஷாம்பு மற்றும் கழிவுநீர் கலப்பதே நுரை பொங்க முக்கிய காரணம் என்று, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் கூறியிருக்கிறார்.

TVK tamil nadu vijay

அவர் பேசியதாவது, "கழிவு நீர், சோப்பு, ஷாம்பு கண்டென்ட் பயன்படுத்தும்போது நுரை வரும். தண்ணீர் மேலிருந்து கீழே விழும்போது இயல்பாகவே நுரை பொங்கும்" என்று கூறியிருக்கிறார். ஒரு காலத்தில் முழுமையான குடிநீர் ஆதாரமாக இருந்த ஆறுகள், தற்போது.. அதன் வளத்தை இழந்து வருகின்றன. குறிப்பாக நுரை பொங்கி வழிவது, ஆற்றின் மொத்த உயிரியல் அமைப்பையும் பாதித்திருக்கிறது. மீன்கள், பாசிகள், அதை நம்பி வாழும் பறவைகள் என சங்கிலி தொடர் போல இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதற்கெல்லாம் காரணம் சாய பட்டறைகளிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுகள்தான் காரணம் என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால், சோப்பு, ஷாம்புவை காரணம் காட்டுவது என்பது ஏற்க முடியாதது என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து 'பூவுலகின் நண்பர்கள்' சூழலியல் அமைப்பின் சுந்தரான், "மக்கள் சாப்பிடும் சாப்பாடுதான் ஆறுகளில் நுரையாக மாறுகிறது, அதனால் மக்கள் சோறு சாப்பிடுவதை நிறுத்தவேண்டும்" என்று நல்லவேளையாக அமைச்சர் சொல்லவில்லை. சாயப்பட்டறை மற்றும் பல மாசுபடுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவால்தான் இந்த மாதிரி நுரை வருகிறது என எவ்வளவோ முறை நிரூபித்தபிறகும் இப்படி மக்கள் மீது பழிபோடுவது யாரை காப்பாற்ற அமைச்சரே?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திருப்பூரில் சாயப்பட்டறைகள் அதிகம். அதிலிருந்து கழிவுகளை வெளியேற்றும்போது.. அதை சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், பெரும்பாலான சாயப்பட்டறைகள் அப்படி செய்வதில்லை. இதனால் சாயக்கழிவுகள் வெளியாகி ஆற்றில் கலக்கின்றன. அதேபோல தொழிற்சாலை கழிவுகளும் இத்துடன் சேரும்போது.. ஆறுகளில் நுரை பொங்கி வழிகிறது. இந்த விஷயம் அந்த சாயப்பட்டறை நிறுவனர்களுக்கும் தெரியும், உள்ளூர் மக்களுக்கும் தெரியும். ஆனாலும் சோப்பு, ஷாம்புகளால்தான் நுரை என்று அமைச்சர் பேசுவது வேடிக்கையாக இருப்பாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+