வேல்முருகன் கையிலெடுத்த திருப்பூர் ஜவுளித்துறை.. நூல் விலை ரூ.5 உயர்வு.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் ஜவுளித் துறை இப்போது வரலாறு காணாத அளவுக்கு பயங்கரமான நிதிச்சுமையை எதிர்கொண்டுள்ளது... பின்னலாடை நகரமான திருப்பூரில், மீண்டும் நூல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. ஆடை உற்பத்தியாளர்களை கலங்க வைத்துள்ள இந்த அதிரடி விலை உயர்வுக்கான பின்னணியில் பெரும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் மறைந்துள்ளன. அதனால்தான், இந்த விஷயத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் முதலில் களமிறங்கி குரல் கொடுத்துள்ளார்.

நடப்பு பருத்தி ஆண்டில் ஆரம்பத்தில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சின் விலை 54 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் இருந்த நிலையில், கடந்த 11 மாத காலத்திற்குள் ராக்கெட் வேகத்தில் எகிறிவிட்டது.. இப்போது 71 ஆயிரம் ரூபாயை பஞ்சு விலை கடந்துள்ளது.

Velmurugan

திருப்பூர் ஜவுளித்துறை

இந்த அளவுக்கு விலை ஏற்றத்திற்கு பின்னால் மிகப்பெரிய கார்ப்பரேட் புரோக்கர்களின் செயற்கையான பதுக்கல் வேலைகளும், இந்திய பருத்திக் கழகத்தின் தவறான கொள்கை அணுகுமுறைகளுமே முக்கியக் காரணமாக தொழில்துறையினர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகிறார்கள்.. மத்திய அரசும் பஞ்சு இறக்குதிக்கான வரிவிலக்கு சலுகையை தாமதமாக அறிவித்ததே இந்த சந்தை சீரழிவுக்கு இன்னொரு காரணமாகும்.

பருத்தி பஞ்சின் இந்த விலையேற்றத்தால், பின்னலாடைகளுக்குத் தேவையான ஒசைரி நூல் விலை கிலோவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் கணக்கிட்டால் நூல் விலை கிலோவுக்கு 92 ரூபாய் வரை ஏறியிருக்க வேண்டும். ஆனால், இக்கட்டான சூழலில் ஆடை உற்பத்தியாளர்களின் நலனைக் காப்பாற்றும் பொருட்டு ஆலை உரிமையாளர்கள் 72 ரூபாயாக குறைத்து நிர்ணயித்திருக்கிறார்கள்.. இருந்தாலும் இப்போதுள்ள நிலையில், கிலோவுக்கு இன்னும் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது திருப்பூர் வர்த்தக வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சு விலை உயர்வு

மத்திய அரசின் தாமதமான அறிவிப்புகளும், இறக்குதி வரிவிலக்கு சலுகை வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமும் இந்தச் சந்தை வீழ்ச்சிக்கு அடிகோலியுள்ளன. தினமும மாற்றப்படும் விலை நிர்ணயங்களால் சிறு மற்றும் குறு ஆடை உற்பத்தியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கியிருக்கிறார்களாம்.

ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பழைய விலை ஒப்பந்தங்களின்படி துணிகளை உற்பத்தி செய்து கொடுக்க முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் விசைத்தறி கூடங்கள் ஒவ்வொன்றாக முடங்கும் அபாயமும் உருவாகியுள்ளது. எளிய மக்களின் வேலைவாய்ப்பும், லட்சக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலமும் இந்தச் சிக்கலால் நசுக்கப்பட்டு வருகிறது.

விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி

இந்தக் விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், இந்திய பருத்திக் கழகம் தினசரி அடிப்படையில் பஞ்சு விலையை நிர்ணயிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக மாதம் ஒருமுறை மட்டுமே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இடைத்தரகர்களின் தலையீட்டை முழுமையாக ஒழிக்கும் வகையில் பருத்துச் சரக்குகளை நேரடியாக நூற்பாலைகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு தரப்பில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், திருப்பூரின் புகழ்பெற்ற பின்னலாடைத் துறை வரலாறு காணாத மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்

இதற்கிடையே, நூல் விலை உயர்வால் நெசவுத்துறை சந்தித்து வரும் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

நெசவாளர்களுக்கு இடைக்கால நிவாரண நிதி மற்றும் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்குவதுடன், அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருத்தி, நூலை முன்கூட்டியே கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதுமட்டுமல்ல, இலவச மின்சார உச்சவரம்பை உயர்த்துதல், அரசு துணி கொள்முதலில் உள்ளூர் நெசவாளர் சங்கங்களுக்கு முன்னுரிமை அளித்தல், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நிலையான விலை நிர்ணயக் கொள்கையை கொண்டு வருதல், பதுக்கல் மற்றும் ஊக வணிகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகளிடம் வேல்முருகன் முன்வைத்துள்ளார்.

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இந்த இக்கட்டான தருணத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் தலையிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+