விநாயகர் சிலை ஊர்வலம்.. திருப்பூரில் நாளை மிகப்பெரிய அளவில் போக்குவரத்து மாற்றம்
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாநகரில் 750-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்காக நாளை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட உள்ளது. எனவே விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி திருப்பூரில் நாளை (சனிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் பற்றி பார்ப்போம்.
திருப்பூர் மாநக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி நாளை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் மாநகருக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் தேவைக்கேற்ப மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பழைய வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக சந்திப்பு மற்றும் 60 அடி சாலையில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். 60 அடி சாலை தற்காலிக பஸ் நிலையமாக செயல்படும்.

பெருமாநல்லூரிலிருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் தேவைக்கேற்ப மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை போயம்பாளையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். போயம்பாளையம் தற்காலிக பஸ்நிலையமாக செயல்படும்.
பழைய பஸ் நிலையத்திலிருந்து பெருமாநல்லூர் செல்லும் பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் தேவைக்கேற்ப அவினாசி சாலை வழியாக திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி நால்ரோடு வழியாக செல்லலாம்.
பெருமாநல்லூரிலிருந்து பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பஸ்நிலையம் சென்றடையலாம்.
அவினாசியிலிருந்து பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பஸ் நிலையத்துக்கு செல்லலாம்.
பழைய பஸ் நிலையத்திலிருந்து அவினாசி மற்றும் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ராஜீவ்நகர் சிக்னல், செல்லாண்டி அம்மன்துறை, மின் மயானம், ஊத்துக்குளி ரோடு, தலைமை தபால் நிலையம், புஷ்பா சந்திப்பு, அவினாசி ரோடு வழியாக செல்லலாம்.
காங்கயம் ரோடு, நல்லூரிலிருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் முத்தனம்பாளையம் நால்ரோடு, கோவில்வழி, வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் செல்லலாம். பல்லடம் சாலையிலிருந்து தாராபுரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டி பிரிவு, காளிகுமாரசாமி கோவில், பிள்ளையார் நகர், கோவில்வழி வழியாக மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றுப்பாதையில் செல்லலாம்.
பல்லடம் சாலையிலிருந்து அவினாசி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், கோவில்வழி, காங்கயம் ரோடு வழியாக நல்லூர், காசிபாளையம் சோதனை சாவடி, கூலிபாளையம், வீரபாண்டி பிரிவு வழியாக செல்லலாம்.
மங்கலம் சாலையிலிருந்து அவினாசி வழியாக செல்லும் வாகனங்கள் அணைப்பாளையம் பிரிவு, அணைப்பாளையம், சலவைப்பட்டறை, சிறுபூலுவபட்டி வழியாக அவினாசி செல்லலாம்.
தாராபுரம் சாலையிலிருந்து அவினாசி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவில்வழி, அமராவதிபாளையம், காங்கயம் ரோடு வழியாக நல்லூர், காசிபாளையம் சோதனைசாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங்ரோடு வழியாக செல்லலாம்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications