’வெயிட் அண்ட் சீ’ விஜய் தலைமையில் மெகா கூட்டணி.. அதிமுகவில் வீழும் விழுதுகள்! டிடிவி சொன்ன மெசேஜ்!
திருப்பூர்: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நான்குமுனை போட்டி இருக்கும் எனவும், அதில் தவெக மிகப்பெரிய கூட்டணி அமைக்கும் என செய்திகள் வருகிறது என கூறியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். மேலும், அதிமுகவிலிருந்து இலைகள் உதிர்ந்தால் பரவாயில்லை விழுதுகளே செல்கிறது எனவும், பாஜக மத்தியத்தம் செய்வதை நான் தவறாக பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
திருப்பூர் அமமுக சார்பில் மாரத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பரிசுகள் வழங்கி, வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அமமுகவினர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்," அண்ணன் செங்கோட்டையன் போன்ற நீண்ட அனுபவம் உள்ளவர்கள் தவெகவில் சேர்கிறார்கள் என்றால் அந்தந்த கட்சிகள் தங்களை சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

டிடிவி தினகரன் பேட்டி
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் பேசி வருகின்றனர். உறுதியான முடிவு எடுத்த பின் அறிவிக்கப்படும். அதிமுக ஒன்றாக இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்து செல்ல முடியும். தேர்தல் முடிவின் பிறகு தூங்கிக் கொண்டு இருப்பவர்கள், தூங்குவது போல நடிப்பவர்கள் ஒருங்கிணைவார்கள் என எதிர்பார்க்கிறேன். பதவி ஆசை சுயலாபத்திற்காக பிரித்து விட்டார்கள். அவர்களாக திருந்த வேண்டும். அல்லது அவர்களை யாராவது எழுப்ப வேண்டும். அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என பாஜக தலைவர்கள் முயற்சி செய்தார்கள் இப்போதும் செய்கிறார்கள்.
விஜய் மெகா கூட்டணி
ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை. மற்ற கட்சியில் இருந்து வந்து கூட்டணிக்காக பேசுவது தவறாக நினைக்கவில்லை, அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாகவும் நான் நினைக்கவில்லை. இது நட்பு ரீதியானது. 53 ஆண்டாக அதிமுகவில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் ஒற்றுமையை வலியுறுறத்தி முயற்சி எடுத்தார். அது பிடிக்காமல் கட்சியை விட்டு நீக்கினால் வீட்டில் போர்வை போர்த்தி உறங்க முடியாது. தேனி போன்று சுறுசுறுப்பானவர். இரண்டு மாதம் ஆலோசித்து நிதானமான முடிவு எடுத்துள்ளார்.
மத நல்லிணக்கம்
செல்லூர் ராஜூ காமெடியாக ஏதாவது பேசுவார். இலை உதிர்ந்தால் பிரச்சனை இல்லை விழுதுகளாக உள்ளவர்கள் சென்றது. அவருக்கு புரிய வில்லை. 16 ம் தேதி விஜய் பிரச்சாரத்திற்கு வழிமுறைகளை பின்பற்றினால் அனுமதி வழங்குவார்கள். தமிழகம் அமைதி பூங்கா இங்கு ஜாதியை கடந்து மதத்தை கடந்து வாழ்ந்து வருகிறோம். மத நல்லிணக்கம் அடிப்படையானது. பெரியார் போன்ற சமூக சீர்திருத்த வாதிகள் மூலம் எல்லோரும் சமம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
விஜய் அரசியல்
கடவுளின் பெயரையோ மதத்தின் பெயரையோ ஜாதியின் பெயரையோ கூறி சுமூக பிரச்சனை அரசியலாக்கி தேவையற்ற பிரச்சனைகளை கலவரங்கள் உருவாகாமல் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் பொருப்போடு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இதனை அரசும் நீதிமன்றமும் சரியாக செய்வார்கள் என நினைக்கிறேன்.
திமுக அதிமுக
தமிழகத்தில் இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி தான் இருக்கும், நான் சொன்னதை புரிந்து கொள்ளாமல் தினகரன் ஐந்தாவது அணி அமைப்பார் என பேசினார்கள். ஆனால் அது உண்மை இல்லை. தமிழகத்தில் நான்கு முனை போட்டி தான் இருக்கும். வெற்றியை நோக்கி எங்கள் கூட்டணி அணிவகுக்கும். சீமான் தனித்துப் போட்டியிடுவார். திமுக அதிமுக, விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய உள்ளதாக எனக்கு செய்திகள் வருகிறது. நான் யாருடன் செல்கிறேன் என இதுவரை முடிவு எடுக்கவில்லை.
அமமுக
கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சில கட்சிகள் எங்களோடு பேசி வருகின்றனர். இறுதி வடிவம் அடைந்த பிறகு உறுதியாக தெரிவிக்கிறேன். எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை நட்பு ரீதியாக பேசி உடன்பாடு எட்டப்பட்டு அமமுக இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்பதை சொல்லிக் கொள்கிறேன். அமமுகவில் தேர்தலுக்காக அனைத்து நிலை உறுப்பினர்களையும் தயார் படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது." என்றார்.
-
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
விஜய் காரை மறித்த அஜிதாவுக்கு சீட் இல்லை.. நடிகர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடியில் போட்டியிட சான்ஸ்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா?












Click it and Unblock the Notifications