திருப்பூரில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் ஐடி என்ஜினியர் கார்த்திக்.. காட்சியை கண்டு அதிர்ந்த குடும்பம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் என்பவருடைய மகன் கார்த்திக் குமார். இவருக்கு 30 வயது ஆகிறது. சாப்ட்வேர் என்ஜினியராக பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் தடைப்பட்டு வந்ததாம். திருமணம் ஆகாத ஏக்கத்தில் இவர் செய்த செயல், மொத்த குடும்பத்தையும் ஆடிப்போக வைத்துள்ளது.
இன்றைக்கு திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கிறது..ஆனால் பெண் தான் பலருக்கும் கிடைப்பதே இல்லை.. கடந்த 30 வருடங்களில் எல்லா வீடுகளிலும் இரண்டு குழந்தை அல்லது ஒரு குழந்தை என்று பிறந்துள்ளதால், பாலின விகிதாசாரத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் பல சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாவே உள்ளது. இதனால் ஆண் பெண் இடையே திருமண வயது விகிதம் 10 வயது வரை கூட அதிகமாக உள்ளது. அதாவது ஒரு ஆண் திருமணம் செய்ய திருமண வயதை எட்டினாலும் 10 வருடம் காத்திருக்கும் அளவிற்கு சில சமுதாயத்தில் சூழல் நிலவுகிறது.

அதேநேரம் திருமணம் பல ஆண்களுக்கு ஆகாமல் இருக்க வயது முக்கிய காரணமாக உள்ளது. பெண்கள் நன்றாக படித்து நல்ல வேலையில் இருப்பதும் காரணமாக பார்க்கப்படுகிறது. படித்த, நன்கு வேலையில் உள்ள பெண்கள், படிக்காத, சரியான வேலையில் இல்லாத ஆண்களை திருமணம் செய்ய விரும்புவது இல்லை. அதேபோல் வேறு சாதியாக இருந்தாலும், நன்கு படித்து, வேலையில் உள்ளவர்களை திருமணம் செய்யவே பெண்கள் விரும்புகிறார்கள்.. இதன் காரணமாக படிக்காத பல இளைஞர்கள் திருமணம் ஆகாமல் ஏக்கத்தில் சுற்றுகிறார்கள்.
அதேநேரம் படித்து நல்ல வேலையில் இருந்தாலும், வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டாரா என்பதை பெண்கள் பார்க்கிறார்கள். உடன் அக்காள், தங்கை இருக்கிறார்களா, லோன் இருக்கிறதா என்பதையும் பார்க்கிறார்கள்.. அதேபோல் ஜாதகம், தோஷம், வயது போன்ற காரணங்களையும் கூறுகிறார்கள். சில சமூகத்தில் உறவுகள் நண்பர்கள் வட்டத்தில் திருமண வயதில் பெண்கள் மிகவும் குறைவாகவே இருப்பதால் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் பலர் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இளைஞருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த ஏக்கத்தில் அவர் செய்த காரியம் குடும்பத்தினரை ஆடிப்போக வைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி சாந்தகுமார் என்பவருடைய மகன் கார்த்திக் குமார் (வயது 30). சாப்ட்வேர் என்ஜினியராக பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடி வேலை செய்தார். இவருக்கு திருமணம் நடத்தி வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவரது திருமணம் தடைபட்டு கொண்டிருந்தது. இதனால் திருமணம் ஆகாத ஏக்கத்தில் அவர் கவலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
நேற்று முன்தினம் கார்த்திக் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் மாத்திரையை தின்று மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கார்த்திக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருமணமாகாத ஏக்கத்தில் என்ஜினியர் உயிரைவிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications