திருப்பூரில் திண்டுக்கல் இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்
திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த ரமேஷ் பனியன் நிறுவன தொழிலாளி ஆவார். ரமேஷின் மனைவி அங்காள ஈஸ்வரி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த 4 மாதத்திலேயே உடல்நிலை சரியில்லாததால் இறந்து போனது. இதனால் அங்காள ஈஸ்வரி மன அழுத்தத்தில் இருந்தாராம்.இந்நிலையில் வேடசந்தூரில் இருந்து தாராபுரத்தில் குடியேறி இந்த தம்பதி வசித்து வந்தார்கள். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்காள ஈஸ்வரி எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிறந்த குழந்தை இறந்து போவது என்பது பெரிய துயரம் ஆகும். அதேநேரம் அதற்காக உயிரை விடுவது என்பது பெரிய முட்டாள்தனமான முடிவாகும். இதுபோன்ற சூழலில் உள்ளவர்கள் மன அழுத்த சிகிச்சை பெற வேண்டும். குழந்தை இறந்த வலியில் இருந்து மீண்டு வருவது கடினம் என்றாலும், மெல்ல மெல்ல மீண்டு வந்து தான் ஆக வேண்டும். அதற்கு மருத்துவர்களின் உதவியை நாடலாம்.

இந்த உலகம் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இயங்கும். எனவே தவறான முடிவெடுக்க வேண்டாம். இந்த பிரச்சனை என்றாலும் பேசி தீர்க்க வேண்டும். வாழ்க்கையை தவறாக புரிந்து கொண்டு, தற்கொலை செய்வதை விட மோசமான கோழைத்தனம் எதுவும் இல்லை.. எனவே அப்படியான முடிவை எந்த சூழலிலும் எடுக்க வேண்டாம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் என்னதான் நடந்தது என்பதை பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் பனியன் நிறுவன தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அங்காள ஈஸ்வரிக்கு 25 வயது ஆகிறது. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு, அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த 4 மாதத்திலேயே உடல்நிலை சரியில்லாததால், அந்த குழந்தை இறந்து விட்டது.
இதனால் ரமேஷ் மற்றும் அங்காள ஈஸ்வரி ஆகியோர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் ரமேஷ் மற்றும் அங்காள பரமேஸ்வரி தம்பதி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு குடிபெயர முடிவு செய்தனர். இதன்படியே திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்துக்கு குடிபெயர்ந்தனா். அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரமேஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
சம்பவம் நடந்த நேற்று முன்தினம், ரமேஷ் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு போய் விட்டார். வீட்டில் அங்காள ஈஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவர், குழந்தையை பறிகொடுத்த சோகத்தை நினைத்தபடியே இருந்ததாக தெரிகிறது. திடீரென அங்காள ஈஸ்வரி, வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டார்.
இதைப்பார்த்த அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்காள ஈஸ்வரியை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அங்காள ஈஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாழ்க்கையை முடித்துக் கொண்ட அங்காள ஈஸ்வரிக்கு, திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications