திருப்பூரில் மகனுடன் சாப்பிட்ட மாலா.. அடுத்த நொடி நடந்த சம்பவம்.. அதிர்ந்து போன அக்கம் பக்கம்
திருப்பூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாமாங்குளம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருடைய மனைவி மாலா. வறுமையின் காரணமாக திருப்பூருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மகனுடன் வந்த மாலா, திருப்பூர் மங்கலம் ரோடு கோழி பண்ணை அருகே வசித்து வந்தார். இந்நிலையில் மகனுடன் சேர்ந்து அவர் எடுத்த முடிவு பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருப்பூர் மாநகரத்தை பொறுத்தவரை வந்தாரை வாழவைக்கும் ஊராக இன்று வரை தொடர்கிறது. லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்களும், பல லட்சம் தமிழர்களும் பிழைப்புத்தேடி வந்த ஊராக இருக்கிறது. திருப்பூர் மாநகரம் கடந்த 25 வருடங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டது. திருப்பூரில் பல ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன.

திருப்பூரை பொறுத்தவரை படித்திருக்க வேண்டும்.. தொழில் தெரிந்திருக்க வேண்டும்... முன் அனுபவம் வேண்டும் என்று எதுவுமே கேட்க மாட்டார்கள்.. வரும் அத்தனை பேருக்கும் வேலை கொடுத்து வாரம் வாரம் ஊதியமும் கொடுத்து அவர்களை வாழ வைத்து வருகிறது. வீட்டை விட்டு ஓடிப்போகும் பல காதலர்களின் முதல் சாய்ஸ் ஆக திருப்பூர் தான் இருக்கிறது. யார் வந்தாலும், வீடு, வேலை, உணவு என மூன்றும் கிடைத்துவிடும். இதன் காரணமாகவே இன்றும் பலர் வேலை தேடி திருப்பூருக்கு வருகிறார்கள். அப்படி வந்த பெண் ஒருவர் எடுத்த முடிவு கலங்க வைத்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாமாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி மாலாவுக்கு 36 வயது ஆகிறது. இவர்களுக்கு சுஜித் குமார்(11) என்ற மகன் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருண்குமார் காலமானார். இதனால் மாலா தனது மகனை அழைத்துக் கொண்டு திருப்பூர் மங்கலம் ரோடு கோழி பண்ணை அருகே உள்ள கே.டி.கே.தோட்டம் பகுதிக்கு வந்தார். அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மகனுக்கு உணவில் மருந்து ஒன்றை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவரும் அதனை குடித்தார்.
சிறிது நேரத்தில் இருவரும் வீட்டில் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாலாவின் உடல்நிலை மிகவும் மோசமானதால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாலா பரிதாபமாக இறந்தார். 11 வயதாகும் சுஜித் குமாருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து மாலா எதற்காக உயிரை விட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை இழந்து, தந்தையையும் இழந்த சுஜித் குமாரின் நிலை கலங்க வைத்துள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications