"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" மாநாட்டில் பிங்க் நிற பையில் ஸ்னாக்ஸ்! 9 வகையான பொருட்கள் என்னென்ன?
திருப்பூர்: திருப்பூரில் நடக்கும் திமுக மகளிர் மாநாடு நிகழ்ச்சியில் சுமார் 2 லட்சம் மகளிர் கலந்து கொள்ளவுள்ள நிலையில் அவர்களுக்காக திமுக தலைமை ஏற்பாடு செய்துள்ள ஸ்னாக்ஸ் பைகளில் என்னென்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதன்படி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற தலைப்பில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமை தாங்குகிறார்.
முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். 234 தொகுதிகளில் இருந்தும் 2 ட்சம் பெண்கள் பங்கேற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாட்டில் ஸ்டாலின் பெண்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜியும் கலந்து கொண்டு பேசுகிறார். பெண்களின் வசதிக்காக மொபைல் கழிப்பறைகள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, தன்னார்வலர்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாடு முடிந்து செல்லும் பெண்களுக்கு இரவு உணவும் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பு கருதி, மாநாட்டை ஒட்டி பல்லடம் மற்றும் காரணம்பேட்டை பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தனித்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாலையில் மகளிர் சாப்பிடுவதற்காக அவர்கள் அமரும் நாற்காலிகளில் ஒரு பைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பைகளில் என்னென்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
பையில் ஸ்டாலின் படம் பெரிதாகவும், கனிமொழி, உதயநிதியின் படங்கள் ஒரே அளவிலும் போடப்பட்டுள்ளன. அந்த பைக்குள் தண்ணீர் பாட்டில், ஹைட் அன்ட் சீக் பிஸ்கெட் பாக்கெட், ரஸ்க், ஹல்டிராம் புஜியா (உருளைக்கிழங்கில் ஓம்பொடி போல் இருக்கும்), ஸ்லைஸ் ஜூஸ், கடலை மிட்டாய், கேக், வேர்க்கடலை, பாஸ்டா என 9 பொருட்கள் அந்த பையில் உள்ளன. இந்த பையின் நிறம், வாட்டர் பாட்டில் ஸ்டிக்கரின் நிறம் பிங்க். இவை எல்லாம் நாற்காலிகளில் வைக்கப்பட்டுள்ளன.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications