ஒரு "பெருச்சாளி" இங்கேயும், அங்கேயும் ஓடுது.. அவர் சைக்கிள் ஓட்டுறார்.. திமுக மீது பாய்ந்த அண்ணாமலை

திமுக அமைச்சர்களை லிஸ்ட் போட்டு அட்டாக் செய்து பேசியுள்ளார் அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: "சில இடங்களில் பெருச்சாளி இங்கேயும், அங்கேயும் ஓடும். அப்படி ஒருவர்தான் தர்மபுரி எம்பி" என்று பாஜகவின் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.. அத்துடன், திராவிட மாடலை கடுமையாக சாடி பேசியதுடன், திமுக அமைச்சர்கள் பற்றியும் கடுமையாக குற்றஞ்சாட்டி பேசியது, திருப்பூர் கூட்டத்தில் அதிர்வை உண்டாக்கி வருகிறது.

திருப்பூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சு திமுகவை எரிச்சலூட்டி வருகிறது.

சொந்த கட்சியின் சாதனைகளை சொல்வதைவிட, ஆளும் கட்சியின் குறைகளை சொல்லி, பொதுவெளியில் டேமேஜ் செய்து வருவதை பாஜக வியூகமாக கையில் எடுத்துள்ளது.

லிஸ்ட்

லிஸ்ட்

குறிப்பாக, இதை அண்ணாமலை செய்து வருகிறார்.. திமுக அமைச்சர்கள் மீதான ஊழல்களை லிஸ்ட்போட்டு சொன்னவர், இனி மாதம் ஒருமுறை, ஒவ்வொரு துறை ஊழல் குறித்தும் வெளிவரும் என்றும் செய்தியாளர்கள் முன்னிலையே பகிரங்கமாக சொன்னார்.. அவர் அன்று சொன்னபடியே செய்தும் வருகிறார்.. நேற்றைய தினம் திருப்பூர் கூட்டத்தில், திமுகவை அளவுக்கு அதிகமாகவே விமர்சித்துவிட்டார். சொந்த தொகுதி என்பதால், அண்ணாமலையின் பேச்சில் நேற்றைய தினம் காட்டம் அதிகமாகவே இருந்தது.

 திராவிட மாடல்

திராவிட மாடல்

திராவிட மாடல் என்று சொல்பவர்கள் 70 வருடங்களாக, குடிசை வீடுகளாகத்தான் வைத்திருந்தனர்... ஆனால், பாஜக அரசு, இந்த 8 வருடங்களில் தமிழகத்தில் மட்டும் 14 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டி தந்துள்ளது.. 11.50 கோடி கழிப்பறைகளை கட்டி தந்துள்ளது.. திமுக தலைவர்கள் தனித்தமிழ்நாடு வேண்டும் என்று முதல்வரை மேடையில் வைத்துக் கொண்டு பேசுகின்றனர்... ஆனால், மோடி எங்கே போனாலும் சரி, அவரது தாய் மொழியான குஜராத்தில் பேச மாட்டார்.

 நல்லா இருக்கீங்களா?

நல்லா இருக்கீங்களா?

யாரைப் பார்த்தாலும், நல்லா இருக்கீங்களா? என்றுதான் விசாரிப்பார்.. ஐநா சபைக்கு சென்றால் கூட, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று தான் சொல்வார்... எந்த நேரத்திலும் தமிழ்நாட்டை வளர்த்திக் கொண்டிருக்கிறார். ஆனால், திமுக அமைச்சர்கள் மக்களை ஒரு பொழுதுபோக்காகவே வைத்துள்ளனர்.. மரியாதை இல்லை... எளிய மக்களை அடிப்பதுதான் திராவிட மாடல்... சில இடங்களில் பெருச்சாளி இங்கேயும், அங்கேயும் ஓடும். அப்படி ஒருவர்தான் தர்மபுரி எம்பி..

செந்தில்குமார்

செந்தில்குமார்

2,000 வருடங்களுக்கு முன்பிருந்தே பூமி தாய்க்கு பூஜை போடுவது வழக்கம். அவர் யார் என்றே பலருக்கு தெரியவில்லை.. திராவிட ஆட்சியில் பூஜை போடுவதா என்று பூஜாரி அரசு அதிகாரிகளை கொச்சைப்படுத்தியுள்ளார். இதை நாம் கண்டிக்க வேண்டும். இப்படியே விட்டால் கோயிலுக்கு போகக் கூடாது. பொட்டு வைக்கக் கூடாது என்றெல்லாம்கூட சொல்வார்கள்... 2024 நாடாளுமன்ற தேர்தலில், இதுபோன்ற மதத்தை அவமானப்படுத்துபவர்களின் சீட்டை கிழித்து அனுப்ப வேண்டும்.

 லூலூ மால்

லூலூ மால்

அமைச்சர் மூர்த்தி, 'அண்ணன் உதயநிதி நீங்க நடிச்ச படம் கெத்து... நீங்கதான் தமிழ்நாட்டின் சொத்து என்கிறார்.. இந்தியாவில் இருந்து எந்த நிறுவனத்தையும் உள்ளே விட மாட்டோம் என்றும் மூர்த்தி சொல்கிறார். லூலூ மால் என்ன வடுகபட்டியில் இருந்து வந்ததா? சிறு குறு தொழிலை அழிப்பதால்தான், நாங்கள் லூலூமால் வேண்டாம் என்கிறோம்.. அதேபோல, இளங்கோவடிகள் எழுதியது சிலப்பதிகாரம். அண்ணன் உதயநிதி எழுதியது செங்கலதிகாரம் என்கிறார் அமைச்சர் நாசர்.. உதயநிதி பிறப்பதற்கு முன்பே எம்எல்ஏ ஆக இருந்த அமைச்சர் ஒருவர், 'ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் துணை நின்றது போல தளபதிக்கு உதய் துணை நிற்பார் என்கிறார்..

Recommended Video

    Annamalai ஆவேசம் MK Stalin வேண்டுகோள் ! | Kallakurichi School Girl Case |Kallakurichi Protest
    சைக்கிள்

    சைக்கிள்

    எதுக்கு இந்த பொழப்பு? தமிழ்நாட்டில் இருக்கிற பிரச்சனையை விட்டுவிட்டு, உதயநிதிக்கு என்ன பட்டம் கொடுப்பது என்பதில் தான் இவர்கள் போட்டி போடுகின்றனர். கள்ளக்குறிச்சி பிரச்னையை தடுத்திருக்க வேண்டிய டிஜிபி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.. போராட்டத்துக்கும் பதில் சொல்ல முடியாமல் முதல்வர் செஸ் போட்டிக்கான ஷூட்டிங்கில் இருக்கிறார்... இந்த 15 மாதங்களில் மின்சாரத்தில் தொடங்கி ஸ்வீட்ஸ் பாக்ஸ் வரை ஏராளமான ஊழல் நடந்திருக்கின்றன. அடிக்கடி வீரவசனம் பேசும், அறநிலையத்துறை அமைச்சரை கடந்த 15 நாள்களாக காணவில்லை..

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+