1 மணி நேரத்தில்.. கை விரல் ரேகை வைத்து 10 மீட்டர் நீள தேசியக்கொடி.. திருச்சி மாணவிகள் அசத்தல்
திருச்சி: கை விரல் ரேகை வைத்து 10 மீட்டர் நீள தேசியக்கொடியை 1 மணி நேரத்தில் உருவாக்கி திருச்சி இந்திரா கணேசன் கல்வியியல் கல்லூரியில் மாணவிகள் 2 பேர் சாதனை படைத்தனர்.
திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள இந்திரா கணேசன் கல்விக்குழும வளாகத்தில் கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் கே.ஹேமா, எஸ்.கலைச்செல்வி ஆகியோர் உலக சாதனைக்கான புதிய முயற்சியை மேற்கொண்டனர்.

அதன்படி, 10 மீட்டர் நீளமுள்ள வெள்ளைத்துணியில் கை கட்டை விரலால் மை கொண்டு தேசியக்கொடி வரையும் முயற்சியை மேற்கொண்டனர். சக மாணவிகள் கரவொலி எழுப்பி உற்சாகம் ஊட்ட, 2 மாணவிகளும் பம்பரமாக சுழன்று கை கட்டை விரல் கொண்டு, பச்சை, ஆரஞ்சு மற்றும் நீல நிறம் மையால் வேகமாக தேசியக்கொடியை உருவாக்க தொடங்கினர். போட்டியின் நடுவராக ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் டிராகன் ஏ.ஜெட்லி செயல்பட்டார்.
சரியாக நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள் தேசியக்கொடியை இடைவிடாது உருவாக்கி முடித்தனர். சரியாக 1 மணி நேரத்தில் 10 ஆயிரம் கை ரேகைகளை மையால் பதித்து தேசியக்கொடி உருவாக்கியது உலக சாதனையாக கருதி, அவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி செயலாளர் ராஜசேகரன் பாராட்டி வாழ்த்தினார்.
சாதனை படைத்த மாணவிகள் ஹேமா, கலைச்செல்வி கூறுகையில்,''ரொம்ப சந்தோஷமாக உள்ளது. 10 மீட்டர் துணியில் தேசியக்கொடியினை கை கட்டை விரல் ரேகை கொண்டு வரைவதற்கு எங்களுக்கு நடுவர், 2 மணிநேரம் அவகாசம் கொடுத்திருந்தார். ஆனால், எங்களுக்கு சக தோழிகள், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் களைப்படையாமல் உத்வேகத்துடன் செயல்பட்டு 1 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கை விரல் ரேகைகளை பதித்து தேசியக்கொடியை உருவாக்கி இருக்கிறோம். சாதனை படைப்போம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், சாதித்து விட்டோம்'' என பெருமிதத்துடன் கூறினர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications