டீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. 2 நண்பர்களை தூக்கியது போலீஸ்!

வணக்கம் சோமு டீச்சரை கடத்திய விவகாரத்தில் 2 பேரை கைதாகி உள்ளனர

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டீச்சரை மிரட்டி கடத்திய வணக்கம் சோமு.. தூக்கியது போலீஸ்! | AIADMK Vanakkam Somu

    திருச்சி: டீச்சரை விரட்டி விரட்டி காதலித்த வணக்கம் சோமு கடத்தல் விவகாரத்தில், அவரது 2 நண்பர்கள் கைதாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி மலைக்கோட்டை எஸ்.ஆர்.சி.ரோட்டை சேர்ந்தவர் வணக்கம் சோமு. 40 வயதாகிறது. மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளர் பதவி வகித்தவர். ஏதாவது ஒரு போராட்டம் நடத்தி ஊருக்குள்ளே ரொம்பவும் பிரபலமாக இருப்பவர்.

    கல்யாணம் 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் ஒரு பெண் காலேஜ் படிக்கிற அளவுக்கு வளர்ந்த பெண். கொஞ்ச நாளைக்கு முன்புதான் இவர் மனைவியை பிரிந்து இருக்கிறார். இந்த சமயத்தில்தான் டீச்சர் மகாலட்சுமி மீது ஒருதலை லவ் இவருக்கு ஏற்பட்டுள்ளது.

    கல்யாணம்

    கல்யாணம்

    இதை டீச்சர் பலமுறை எச்சரித்தும், கண்டித்தும், வெறுத்தும், அவர் பின்னாடியே சோமு சுற்றி சுற்றி வந்துள்ளார். மகாலட்சுமி டீச்சருக்கு வயது 32 ஆகிறது. காலேஜ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாட்டை வீட்டில் செய்து வருகிறார்கள்.

    வணக்கம் சோமு

    வணக்கம் சோமு

    இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும்தான் வணக்கம் சோமுவுக்கு ஆத்திரம் வந்துள்ளது. அதனால் கடத்தல் வரை பிளான் செய்துவிட்டார். கடந்த 30-ந் தேதி மகாலட்சுமி தனது தோழி ஹேமாவுடன் காலேஜுக்கு வடக்கு ஆண்டாள் வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது ஆம்புலன்சு வேனில் வணக்கம் சோமு, அவரது ஆதரவாளர்கள் 5 பேர் மகாலட்சுமியை வலுக்கட்டாயமாக இழுத்து உள்ளே தள்ளினர்.

    ஆதரவாளர்கள்

    ஆதரவாளர்கள்

    டீச்சரை கடத்தி கொண்டு போய் கல்யாணம் செய்ய முடிவு செய்திருந்தார் வணக்கம் சோமு. ஆனால், மகாலட்சுமி கடத்தப்பட்ட தகவல் அறிந்து கோட்டை போலீசார் அந்த ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் இப்படி பின்னாடியே வருவதை அறிந்த சோமுவும், ஆதரவாளர்களும் கடத்தப்பட்ட மகாலட்சுமியை துவரங்குறிச்சியில் நடுவழியில் இறக்கி விட்டுவிட்டு தப்பினர். பின்னர் மகாலட்சுமியை போலீசார் மீட்டு கொண்டு வந்து விசாரித்தபோதுதான் விவரங்கள் வெளியே வந்தன.

    குற்றாலம்

    குற்றாலம்

    ஆனால் அதற்குள் சோமு எஸ்கேப் ஆகியிருந்தார். அதனால், அவரையும், அவரது ஆதரவாளர்கள் 5 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 4 நாட்களாக சோமு எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில், சோமு உள்ளிட்ட 6 பேருமே குற்றாலத்தில் பதுங்கி இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் இந்த விஷயம் கேள்விப்பட்ட அதிமுக தலைமையானது, வணக்கம் சோமுவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கம் செய்தது.

    நண்பர்கள்

    நண்பர்கள்

    இதற்கிடையே மீட்கப்பட்ட மகாலட்சுமியிடம் வேனில் யார் யார் இருந்தார்கள்? என்று போலீசார் கேட்டபோது, வணக்கம் சோமுவுடன் வேன் டிரைவர் விக்கி என்ற விக்னேசுவரன், வெளிநாட்டு நண்பர்கள் 2 பேர் உள்பட 5 பேர் இருந்ததாக சொன்னார். பின்னர் வணக்கம் சோமு பயன்படுத்திய பேஸ்புக் ஐடியை போலீசார் திறந்து ஆய்வு செய்தனர். அப்போது அவருடைய நண்பர்கள் போட்டோக்கள் இருக்கவும், அவர்கள்தான் தன்னை கடத்தியது என்று மகாலட்சுமி அடையாளம் காட்டினார்.

    மலேசியா, சிங்கப்பூர்

    மலேசியா, சிங்கப்பூர்

    ஒருவர் பெயர் அலெக்ஸ் 36, தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர். சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இன்னொருவர் பெயர் மரியபிரகாஷ், 36. இவரும் தஞ்சையை சேர்ந்தவர். மலேசியாவில் வேலைபார்த்து வருகிறார். இவர்கள் 2 பேருமே கடத்தப்பட்ட ஆம்புலன்ஸில் இருந்து பாதி வழியில் இறங்கி கொண்டார்களாம். எங்கெங்கோ சுற்றிதிரிந்துவிட்டு, அவரவர் வெளிநாடு செல்ல, திருச்சி ஏர்போர்ட்டுக்கு கிளம்ப தயாரானார்கள். ஆனால், நம் போலீசார் 2 பேரையுமே சுற்றி வளைத்து கைது செய்துவிட்டனர். ஆனால் வணக்கம் சோமுவை இன்னும் காணோம். அவர் உட்பட மற்ற ஆதரவாளர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+