காதலனுடன் ஆற்றுப் பாலத்தில் ஜாலி.. காதலியை துரத்திய கும்பல்.. காதலனை ஆற்றில் வீசிய கொடூரம்!

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காதலியிடம் பலாத்கார முயற்சி... தடுத்த காதலனை ஆற்றில் வீசிய கும்பல்-வீடியோ

    திருச்சி: ஆத்துப்பாலத்துக்கு அடியில் காதலனுடன் ஜாலியாக பேசி கொண்டிருந்த காதலியை 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ய முயன்றது.. ஆனால் அது முடியாமல் போனதால், அந்த ஆத்திரத்தில் காதலனை தூக்கி ஆற்றில் வீசிவிடவும், அவர் இப்போது வெள்ளத்தோடு மாயமாகி உள்ளார்!

    திருச்சி அண்ணா பொறியியல் காலேஜில் படிப்பவர் ஜீவித். இவர் துறையூரை சேர்ந்தவர். இவர் தனது காதலியுடன் சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் அடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

    தனிமையில் காதல் ஜோடி ஒன்று தங்களை மறந்து பேசி கொண்டிருப்பதை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கவனித்து கொண்டே இருந்தது. அவர்கள் அந்த பகுதியில் உட்கார்ந்து தண்ணி அடித்து கொண்டும், கஞ்சா புகைத்துக் கொண்டும் இருந்தனர்.

    காதலி

    காதலி

    பிறகு தள்ளாடியபடியே காதல் ஜோடியிடம் வந்து, அந்த இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது. 5 பேருமே ஒரே நேரத்தில் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதும், ஜீவித்தால் தடுக்க முடியவில்லை. அதனால், காதலியை ஓடி விடும்படி சொன்னார்.

    ஆத்திரம்

    ஆத்திரம்

    இதனால் இளம்பெண் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பலாத்காரம் செய்ய முடியாமல் போனதால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், ஜீவித்தை சரமாரியாக அடித்து உதைத்துள்ளது... இறுதியாக ஜீவித்தை தூக்கி கொள்ளிடம் ஆற்றில் தூக்கி விட்டது. அப்போது, கொள்ளிடம் ஆற்றில் 14 ஆயிரம் கன அடிக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதில் விழுந்த ஜீவித், தண்ணீரின் வேகத்தில் இழுத்து செல்லப்பட்டுவிட்டார்.

    2 பேர் பிடிபட்டனர்

    2 பேர் பிடிபட்டனர்

    ஆனால், நடுரோட்டில் ஒரு இளம்பெண், அலறி அடித்து கொண்டு ஓடிவருவதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, என்ன ஏதென்று கேட்டுள்ளனர். அதன்பிறகு போதை கும்பலை விரட்டி சென்றனர். ஆனால், அவர்களில் 2 பேர்தான் பிடிபடவும் அவர்களை ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த கொள்ளிடம் போலீசார், தப்பி ஓடிய மற்ற 3 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாயமான ஜீவித்

    மாயமான ஜீவித்

    இதனிடயே, ஆற்றில் வீசப்பட்ட ஜீவித்தை ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலமாக தீவிரமாக தேடினார்கள். ஆனாலும் கிடைக்கவில்லை. அதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டதால், தற்காலிக அவரை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஜீவித்தை தேடும் பணி நடக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+