20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க போறோம்.. திருச்சியில் ஸ்டாலின் கொடுத்த அப்டேட்.. எப்போது?
திருச்சி: தமிழ்நாட்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலமாக இன்னும் 3 மாதங்களுக்குள் லேப்டாப் கொடுக்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இலவச லேப்டாப் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் லேப்டாப் வாங்குவதற்கான பெரிய தொகையை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

லேப்டாப் திட்டம்
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு லேப்டாப்பின் மதிப்பும் ரூ.20 ஆயிரமாக இருக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதற்காக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, தேவையென்றால் கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும் என்றும் கூறி இருந்தார்.
எப்படி இருக்கும் லேப்டாப்?
தொடர்ந்து 20 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை எல்காட் நிறுவனம் வெளியிட்டது. அதேபோல் லேப்டாப் 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இன்ச் திரை, ப்ளூடூத் 5.0, 5 மணி நேரம் வரை தாங்கும் 4 அல்லது 6 செல் லித்தியன் அயன் பேட்டரி, லேப்டாப்பின் முன்புறம் 720p ஹெச்டி கேமரா, விண்டோஸ் 11 உள்ளிட்ட செயல்திறன் கொண்டதாக வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
வாரண்டி, சர்வீஸ்
லேப்டாப்களுக்கு 1 ஆண்டு வாரண்டி மற்றும் சர்வீஸ் சென்டர் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த முறை அளிக்கப்பட்ட லேப்டாப்களை தனியார் சர்வீஸ் சென்டர்களில் மாணவர்கள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை களையும் வகையில் டெண்டரின் போதே லேப்டாப் சர்வீஸ் மற்றும் வாரண்டி தேவை என்பதிலும் தமிழக அரசு கவனமாக உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அதேபோல் லேப்டாப் டெண்டரில் பன்னாட்டு நிறுவனங்களான டெல், ஏசர், லெனோவா, எச்பி உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. இருந்தாலும் லேப்டாப் எப்போது மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் ஜமால் முகமது கல்லூரியில் மாணவர்கள் முன் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.
லேப்டாப் அப்டேட்
இளைய சமூதாயத்தை அறிவு சமூகமாக வளர்க்க இந்த லேப்டாப் கொடுக்கிறோம் என்று தெரிவித்தார். ஏற்கனவே வேலூரில் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார். அதற்கேற்ப ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் அளிக்கப்பட இருக்கின்றன.
டெண்டர் எப்போது?
தற்போது திருச்சியில் தமிழக அரசின் லேப்டாப் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அப்டேட் கொடுத்துள்ளார். ஜூலை 12ஆம் தேதியுடன் லேப்டாப்-க்கான பன்னாட்டு டெண்டர் முடிவடைய உள்ள நிலையில், விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications