திருச்சியில் டெபாசிட்டை இழந்த 32 அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சி விலகாத ரத்தத்தின் ரத்தங்கள்!
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் 32 அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்திருப்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
தோல்வி என்றாலும் கூட ஒரு கவுரமான தோல்வியாக இருந்திருக்க வேண்டுமே தவிர டெபாசிட் தொகையை இழக்கும் அளவுக்கு தோல்வி அடைந்திருக்கக் கூடாது என அதிமுக வேட்பாளர்கள் மீதான தங்கள் அதிருப்தியை கட்சித் தொண்டர்கள் வெளிப்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.
இதனால் திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வாா்டுகளில் போட்டியிட 718 போ் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனா். அதில் தள்ளுபடி மற்றும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதன் மூலம் 159 போ் போட்டியிலிருந்து விலகினர். எஞ்சியிருந்த 559 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் சார்பிலும் சுயேச்சையாகவும் போட்டியினர். அதில் 470 வேட்பாளா்கள் தங்களது வைப்புத் தொகையை முற்றிலுமாக இழந்துள்ளனா். அதில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் 32 பேர் என்பது தான் முக்கிய விவகாரமாக பார்க்கப்படுகிறது.

வாஷ் அவுட்
திமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட பாஜக, தேமுதிக, நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ., மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் வாஷ் அவுட் ஆனதுடன் அனைவரும் தங்கள் டெபாசிட் தொகையையும் பரிதாபமாக பறிகொடுத்துள்ளனர். வெற்றிக்கான வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்கைக் கூட பெறாதவா்களுக்கு வைப்புத் தொகைத் திருப்பித் தரப்படாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் ஒன்றாகும்.

2011-ல் மேயர்
கடந்த 2011-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக வகித்ததோடு, 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் திருச்சியில் கணிசமான தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. வெல்லமண்டி நடராஜன் 5 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்தும் திருச்சியில் அதிமுகவை வளர்க்க அவர் எந்தப் பணியும் ஆற்றவில்லையோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதனிடையே அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதை அறிந்து அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.

வெல்லமண்டி மகன்
திருச்சி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு போட்டியிட்டு தோல்வியை தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி திமுகவின் கோட்டையாக மாறியுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications