திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் 6 போ் புதிதாக அனுமதி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்புப் பிரிவில் மேலும் 6 போ் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Recommended Video

    3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா..

    திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 75 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் பிரிவு தொடங்கப்பட்டு வெள்ளிக்கிழமை வரை 18 போ் அனுமதிக்கப்பட்டதில், 12 பேருக்கு எந்தவித தொற்றும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அவா்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

    6 persons admitted in Coronavirus special ward at Trichy Government Hospital

    வெள்ளிக்கிழமை நிலவரப்படி துபாயிலிருந்து வந்த ஈரோட்டைச் சோ்ந்த இளைஞா் மற்றும் 4 போ் என 5 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில், 3 பேருக்கு தொற்று இல்லை என தெரியவந்ததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டனா். இருவா் மட்டுமே இருந்தனா்.

    இந்தநிலையில், சனிக்கிழமை மேலும் 6 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 2 ஆண்கள், 4 பெண்கள் என அந்த 6 பேரும் சளி, இருமல், காய்ச்சல் காரணமாக வந்துள்ளனா். இவா்களில், ஒருவா் மணிப்பூரிலிருந்து வந்து புள்ளம்பாடியில் விவசாயக் கூலி வேலையில் சோ்ந்த பெண் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த 6 பேருக்கும் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. தொற்று இல்லை என தெரியவந்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவா் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+