கேஸ் அடுப்பு பைப்பில் தகதகவென மின்னிய தங்க துண்டுகள்!
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி: அடேங்கப்பா.. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.. எப்படி எல்லாம் தங்கம் கடத்தறாங்க தெரியுமா? வேற லெவல் கடத்தல்தான்! கேஸ் அடுப்பு பைப் வரை தங்கம் கடத்துவது வந்துவிட்டது!
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூரிலிருந்து மலிண்டா ஏர்லைன்ஸ் விமானம் வந்து நின்றது. இதிலிருந்து வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரம் திருவாடானையை சேர்ந்த நபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது.

அவர் கையில் காஸ் அடுப்பை கொண்டு வந்திருந்தார். அதனை உடனடியாக வாங்கி அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். கேஸ் அடுப்பு பைப்பில் தகதகவென மின்னியது தங்க துண்டுகள்!
வெறும் துண்டுகள்தானே என்று சொல்லிவிட முடியாது.. அவை மொத்தம் 24 கேரட் 580 கிராம் தங்கமாம். அதாவது 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பு தங்கமாம். அதனைதான் கேஸ் பைப்புக்குள் திணித்து கடத்தி வந்திருக்கிறார்.

இந்த அளவுக்கு யோசித்து தங்கத்தை கடத்தி வந்தவர் பெயர் சக்கரவர்த்தி என்பதாம். இப்போது அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கி கொண்டுள்ளார் சக்கரவர்த்தி!
-
அய்யா செல்லூர் ராஜூ நீங்களா? தெர்மாகோல் மேட்டரை மிஞ்சிய தவெக எம்எல்ஏ! குப்பைக்கு குபீர் ஐடியா! -
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications