நாம் தான் பதவிக்கு வந்துவிட்டோமே என்ற மெத்தனம் கூடாது! நிர்வாகிகளுக்கு கிளாஸ் எடுத்த கே.என்.நேரு!
திருச்சி: நாம் தான் பதவிக்கு வந்துவிட்டோமே என்ற நினைப்பில் யாரும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என திமுக நிர்வாகிகளுக்கு பாடம் நடத்தியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பூத் கமிட்டி அமைப்பு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை பார்வையிடுவதற்காக தலைமைக்கழகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதில் செந்தில்குமார், அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, அதிமுகவினர் தங்கள் கட்சியில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என கூறி வரும் நிலையில் நாம் 2 கோடி பேரை திமுகவில் உறுப்பினராக்கி முதல் இடத்தை அடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளையும், அவரது நடவடிக்கைகளையும் கண்டு எதிரிகள் அருகில் வரவே யோசிக்கிறார்கள் என்றும் தமிழ்நாட்டில் திமுக தான் இனி எப்போதும் ஆட்சியில் இருக்கும் என்றும் அமைச்சர் நேரு தெரிவித்தார்.
இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனக் கூறிய அவர், ஒவ்வொரு நிர்வாகியும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நாம் தான் பதவிக்கு வந்துவிட்டோமே என்ற மெத்தனத்தில் யாரும் கால் மேல் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது என்று மிக கறாராக அட்வைஸ் செய்த நேரு, நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளை நாம் வெல்ல வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
தமிழகம் முழுவதும் நாளை உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முன்னெப்பின் மூலம் திமுகவில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications