திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சவாரி புக் செய்த பயணியிடம் ஆபாச பேச்சு.. அடாவடி ஓலா ஆட்டோ டிரைவர் மீது போலீசில் புகார்!

Google Oneindia Tamil News

திருச்சி: பயணியையும், அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசிய ஓலா ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சியை அடுத்த மருதாண்டகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்.

செல்போன் அழைப்பில் வந்த எமன்...கார் மீது பைக் மோதியதில் தந்தை கண் முன்னே மகன் பலி - 3 பேர் படுகாயம் செல்போன் அழைப்பில் வந்த எமன்...கார் மீது பைக் மோதியதில் தந்தை கண் முன்னே மகன் பலி - 3 பேர் படுகாயம்

இவர் நேற்று திருச்சி என்.எஸ். பி சாலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு தனது தாய் தந்தையுடன் சென்று உள்ளார். மீண்டும் வீடு திரும்புவதற்கு ஓலா ஆட்டோ புக் செய்துள்ளார்.

 அடாவடி ஆட்டோ டிரைவர்

அடாவடி ஆட்டோ டிரைவர்

மறுமுனையில் பேசிய ஓலா ஆட்டோ டிரைவர் ராஜவேல் ''எவ்வளவு ரூபாய் காட்டுகிறது என தர்மராஜிடம் கேட்டபோது 90 ரூபாய் காட்டுவதாக குறிப்பிட்டார். ஆனால் 120 ரூபாய் வேண்டும் என ஆட்டோ டிரைவர் ராஜவேல் கேட்டுள்ளார். இதனை தருவதாக தர்மராஜ் ஒப்புக்கொண்டார்.
ஆனாலும் ஆட்டோ டிரைவர் ''கோட்டைவாசல் முன்னதாக உள்ள சர்ச் வாசலில் வந்து உங்களை ஏற்ற முடியாது. எதிர்புறம் 200 மீட்டர் தாண்டி உள்ள சாலையை கடந்து வந்து நில்லுங்கள்'' என கூறியுள்ளார்.

ஆபாசமாக பேசினார்

ஆபாசமாக பேசினார்

தனது தாய் தந்தை வயதானவர்கள் அவர்களால் நடக்க முடியாது என தர்மராஜ் குறிப்பிட அதை காதில் வாங்காமல் இருந்த ஓலா ஆட்டோ டிரைவர் ராஜவேல் ஆபாச வார்த்தைகளில் திட்டி தீர்த்துள்ளார். ''உங்களுக்கெல்லாம் எதற்கு ஓலா ஆட்டோ'' என தர்மராஜையும் அவர் குடும்பத்தையும் திட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தர்மராஜ் ஓலா ஆட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு புகார் தெரிவித்தார்.

ட்விட்டர் மூலம் புகார்

ட்விட்டர் மூலம் புகார்

அது மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் முதல்வரின் தனி பிரிவிற்கு ட்விட்டர் மூலம் புகார்களை அனுப்பியுள்ளார். தொடர்ந்து ஓலா ஆட்டோவில் வரும் ஆட்டோ டிரைவர்கள் பயணிகளிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாகும் அடிக்கடி கேன்சல் செய்யுங்கள் என வற்புறுத்துவதும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் ஓலா ஆட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் கொடுத்தற்க்கு ராஜவேலுக்கான சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று உள்ள ஆட்டோ டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது ஓட்டுனர் உரிமையும் பறிக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலரும் தெரிவிக்கின்றனர்.

English summary
There has been a call for action against Ola Auto Driver for speaking obscenely to the passenger and his family. The public and social activists are calling for the deprivation of the driving licence
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X