ம்ஹூம்.. வரமாட்டேன்.. சுட்டே கொன்னுடுவாங்க.. அடம்பிடித்த கைதி.. கண்ணாடி துண்டால் கிழித்து அட்டகாசம்
சிறையில் இருந்து கோர்ட்டுக்கு வர மறுத்துள்ளார் ஒரு கைதி
Recommended Video
திருச்சி: "ம்ஹூம்.. கோர்ட்டுக்கு வர மாட்டேன்.. என்னை சுட்டு கொன்னுடுவாங்க.. " என்று கைதி ஒருவர் ஜெயிலில் அடம் பிடித்துள்ளார்.. மேலும், கண்ணாடி துண்டால் தனக்கு தானே உடம்பெல்லாம் கிழித்து கொண்டு.. அட்டகாசம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வழக்கு நிலுவையில் உள்ள விசாரணை கைதிகள் அவ்வப்போது வழக்கு விசாரணைக்கு கோர்ட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வினோத் என்பவர் திருச்சி சிறையில் உள்ளார். இவர் சங்கிலி வழக்கில் கைதானவர்.. இந்த வழக்கு தொடர்பாக அவரை போலீசார் அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முயன்றனர்.
அப்போது அவர், "நான் வெளியே வரமாட்டேன்.. நான் வந்தால் போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்னுடுவாங்க.. கோர்ட்டுக்கு வரமாட்டேன்.. முடியாது.." என்று திடீரென அடம் பிடித்தார். அப்போதும் போலீசார் அவரை அழைத்துசெல்ல முயன்றபோது, கீழே கிடந்த கண்ணாடி துண்டை எடுத்து தனக்கு தானே உடலில் கிழித்து கொண்டார். இதனால் உடம்பெங்கும் ரத்தம் கொட்டியது.
இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதற்கு பிறகு, ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.
வினோத் இவ்வளவு நடுங்குவதற்கு காரணம், வெறும் சங்கிலி பறிப்பு கேஸ் மட்டும் இல்லை.. திருச்சி, அரியலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் ஏகப்பட்ட கிரிமினல் கேஸ்களில் சிக்கி உள்ளார். இதற்குதான் வினோத்துக்கு மரண பயம் பீறிட்டு வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications