செக் வெச்சுட்டாங்க.. இனி பாஸ்போர்ட் மோசடி கஷ்டம்! புதிதாக விண்ணப்பிக்க இதை மட்டும் செய்தால் போதும்
திருச்சி: பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது, ஆதாா் அட்டையை 'டிஜி லாக்கா்' முறையில் சமா்ப்பிக்க வேண்டும் என மண்டல கடவுச் சீட்டு அலுவலா் ஆனந்த் தெரிவித்து உள்ளாா்.
பாஸ்போர்ட் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை விண்ணப்பிக்கும்போது பல்வேறு மோசடிகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. முறைகேடான முறையில் போலி ஆவணங்களை பெறுவதும் தொடர் கதையாகி உள்ளன. வெளிநாடு செல்வதற்கு தேவையான அடிப்படை ஆவணமான பாஸ்போர்டிலும் முறைகேடுகள் நடக்கின்றன.

இதனை தடுக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருச்சி மண்டல கடவுச் சீட்டு அலுவலா் ஆா்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, தேவைப்படும் ஆவணங்களில் சிலவற்றை 'டிஜி லாக்கா்' முறையில் சமா்ப்பித்து அவற்றை சரிபாா்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை ஆதாா் அட்டை உண்மை மற்றும் நகல்களை நேரடியாக பிஎஸ்கே மையங்களில் சமா்ப்பிக்க வேண்டி இருந்தது. ஆனால் அவற்றில் மோசடிகள் அதிகரித்து உள்ளதால், அதை தடுக்கும் வகையில் ஆதாா் அட்டையை 'டிஜி லாக்கா்' முறையில் சரிபாா்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு, இனி அதே முறையில் ஆதாா் அட்டையை இணைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இதுபோல ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும், சரிபாா்த்தல், செயலாக்கம் உள்ளிட்டவற்றுக்கு செலவாகும் நேரத்தை குறைக்கும் வகையில் 'டிஜி லாக்கா்' முறையில், பிறப்புச் சான்று, கல்விச் சான்றுகள் உள்ளிட்ட சில ஆவணங்களை ஆவணப்படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
எனவே, பாஸ்போா்ட் சேவை மையங்களுக்கு செல்லும்போது ஆவணங்களின் உண்மை நகல்களை கொண்டு செல்லத் தேவையில்லை. அதுபோல இனி வரும் காலங்களில் ஆதாா் அட்டையை நேரடியாக கொண்டு செல்ல வேண்டாம். மாறாக, 'டிஜி லாக்கா்' முறையில் சரி பாா்க்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அந்த முறையை பொதுமக்கள் இனி பயன்படுத்திக் கொள்ளலாம்." என்று திருச்சி மண்டல கடவுச்சீட்டு அலுவலா் ஆா்.ஆனந்த் தெரிவித்து உள்ளாா்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications