தூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகர்.. எழுப்பி கழுத்தில் குத்தி கொன்ற நண்பன்.. அதிர்ச்சியில் லால்குடி!
திருச்சி அருகே.. ரஜினி ரசிகர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
Recommended Video
திருச்சி: தூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகரை, எழுப்பி கூட்டி வந்து, கழுத்திலேயே கத்தியால் குத்தி கொன்றுவிட்டார் சக நண்பன். இதனால் லால்குடி பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
திருச்சி மாவட்டம் லால்குடி சின்னசெட்டி தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. 20 வயதான இவர் ஒரு தீவிரமான ரஜினி ரசிகர். பிளஸ்-2 வரை படித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து அந்த பகுதியில் விநாயகர் சிலையை வைத்துள்ளனர் பார்த்தசாரதி, மற்றும் அவரது நண்பர் தினேஷ்குமார் என்பவர்.

தினேஷ்குமார்
நேற்று விநாயகர் சிலைக்கு பூஜை செய்யப்பட்டு, பொதுமக்களும் தரிசித்து சென்றனர். பிறகு நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தசாரதி தண்ணி அடித்துள்ளார். அப்போதுதான், பணம் வசூல் செய்ததில் தினேஷ்குமார் ஏமாற்றிவிட்டதாக தெரிந்துள்ளது. இதைப்பற்றி தினேஷ்குமாரிடம் பார்த்தசாரதி கேட்க போய் அது கைகலப்பாக மாறியது.

தூக்க கலக்கம்
இந்தநிலையில் நள்ளிரவு 1 மணிக்கு, தினேஷ்குமாரிடம் பணம் கையால் பண்ணிட்டியாமே என்று கேட்டுள்ளார். "இதை உனக்கு யார் சொன்னது" என்று கேட்டதற்கு, "பார்த்தசாரதி தான் சொன்னான்" என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், நேராக பார்த்தசாரதி வீட்டுக்கு போய், தூங்கி கொண்டிருந்தவரை எழுப்பி கற்பக விநாயகர் கோவில் பகுதிக்கு அழைத்து வந்து விளக்கம் கேட்டார்.

சண்டை
அப்போது திரும்பவும் இருவருக்கும் சண்டை ஆரம்பமானது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தினேஷ்குமார், இடுப்பில் செருகி இருந்த கத்தியை எடுத்து பார்த்தசாரதி கழுத்தில் குத்தினார். தடுக்க வந்த கார்த்திகேயனையும் குத்தினார். இதில் கழுத்தில் கத்திகுத்து விழுந்ததால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி பார்த்தசாரதி உயிருக்கு போராடினார்.

கைது
பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பதற்குள் உயிர் பிரிந்தது. இது தொடர்பாக லால்குடி போலீசார் தினேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதுடன், அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications