Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நயினார் போட்ட போடு.. ஓயாமல் புகையும் அதிமுக.. "சனி விலகிடுச்சு".. அட்டாக் செய்த மாஜி அமைச்சர்

பாஜகவை மறைமுகமாக தாக்கி ஓஎஸ் மணியன் பேசியிருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: வழக்கமாக ஜாதகம் பார்க்கும்போது சனி, கேது என வேண்டாத கிரகங்கள் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்லுவார்கள்.. இப்போது அந்த வேண்டாத கிரகங்கள் எல்லாம் நம்மை பிரிந்த பிறகு, சுதந்திரமாக, நல்ல சகுணத்தில் தேர்தலை சந்திக்கிறோம்... இதுவும் அதிமுகவுக்கு வெற்றியாகும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகக் கூட்டம் ஸ்ரீரங்கம், காட்டூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

ஸ்ரீரங்கத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிமுகப்படுத்திவைத்து பேசினார்.

 2 கேள்விகள்

2 கேள்விகள்

அப்போது, "நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அதிமுகவின் கொள்கை... நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு சரியான தெளிவை ஏற்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும்... சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேட்க நினைத்த 2 கேள்விகளை இங்கு நான் கேட்கிறேன்... இந்தியாவில் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சுப்ரீம்கோர்ட் சொல்லிவிட்ட நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை கோர்ட் ஏற்கவில்லை... அதனால் இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்யப் போகிறது?.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

ஏற்கெனவே அனுப்பிய நீட் விலக்கு தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிவிட்டார்... இப்போது ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து, மறுபடியும் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்பட்சத்தில் அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்வாரா? இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

 சனி, கேது

சனி, கேது

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை அதிமுக பெறவுள்ளது. ஏனென்றால், பொங்கல் பரிசுத் தொகுப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் ஆளுங்கட்சியை அனைத்துத் தரப்பு மக்களும் விமர்சனம் செய்யும் நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல், வழக்கமாக ஜாதகம் பார்க்கும்போது சனி, கேது என வேண்டாத கிரகங்கள் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்லுவார்கள்.. இபபோது அந்த வேண்டாத கிரகங்கள் எல்லாம் நம்மை பிரிந்த பிறகு, சுதந்திரமாக, நல்ல சகுணத்தில் தேர்தலைச் சந்திக்கிறோம். இது, இன்னொரு வகையில் அதிமுகவுக்கு வெற்றியாகும்" என்றார்.

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

ஏற்கனவே, நயினார் நாகேந்திரன் சர்ச்சையாக பேசியதால்தான் இப்போது வரை விவகாரம் புகைந்து கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது.. அதனாலேயே கூட்டணியில் இருந்து பாஜகவை அதிமுக கழட்டி விட்டதாக கூறப்படுகிறது.. இனிமேல் கூட்டணிக்குள்ளேயே பாஜக வேண்டாம் என்று அதிமுகவுக்குள்ளேயே முக்கிய தலைவர்களும், தொண்டர்களும் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆனால், பாஜகவை கழட்டிவிட எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லையாம்.. 2 வருடம் பாஜக ஆட்சி மத்தியில் இருக்கும்போது பகைத்து கொள்ள கூடாது என்றே நினைக்கிறாராம்.. எனினும், அடுத்தமுறை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சேருமா என்பதே சிக்கல் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதை சிவி சண்முகம் 2 நாளைக்கு முன்பு ஓபனாகவே அதை சொல்லிவிட்டார்.. "ஒரு வாரமாக அதிமுக நிம்மதியா இருக்கு.. ஒரு பாரம் குறைஞ்சது மாதிரி" என்று பொதுவெளியிலேயே போட்டுஉடைத்துவிட்டார்.. இப்போது ஓஎஸ் மணியனும் பாஜக கூட்டணியில் இல்லாதது சுதந்திரமாக இருப்பதாக சூசககமாக சொல்லி உள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+