2ம் வகுப்பு மாணவியை மடியில் தூக்கி வைத்து.. அதிமுக வட்ட செயலாளரின் அசிங்கம்.. வெளுத்த பெற்றோர்கள்!
பாலியல் தொல்லை அளித்ததாக திருச்சி அதிமுக வட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

திருச்சி: 2-ம் வகுப்பு குழந்தை கிட்ட 50 வயசு ஆள் இவ்வளவு கீழத்தரமாகவா நடந்து கொள்வது? அதுவும் ஒரு அதிமுக வட்டசெயலாளர் பண்ற வேலையா இது?
பள்ளி தாளாளர் அறைக்கு 7 வயது மாணவியை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த அ.தி.மு.க செயலாளரை பள்ளி வளாகத்திலேயே பெற்றோர், மற்ற மாணவர்களின் பெற்றோர் அடித்து உதைத்தனர்.

50 வயது சலீம்
திருச்சி ஆழ்வார்தோப்பில் காயிதே மில்லத் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக இருப்பவர் மீரான் மைதீன். இவருக்கு திடீரென கொஞ்ச நாளாக உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அந்த பள்ளியின் செயலாளர் சலீம் என்பவரை பொறுப்பில் உட்கார வைத்துவிட்டு மீரான் லீவில் சென்றுவிட்டார். சலீமுக்கு வயசு 50. அதுமட்டுமல்லாமல் 49 ஏ வட்ட அதிமுக செயலாளராகவும் தற்போது உள்ளார்.

பாலியல் தொல்லை
தனது அறையில் உட்கார்ந்து கொண்டு இவர் செய்யும் வேலை என்ன தெரியுமா? 2ம் வகுப்பு படிக்கும் மாணவியை தினமும் தனது அறைக்கு வரவழைத்து கொள்வது. அந்த குழந்தையை தூக்கி தன் மடியில் உட்கார வைத்து கொள்வது. பிறகு பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பிப்பது. தினமும் இதே பொழப்பாக இருந்திருக்கிறது இந்த வட்ட செயலாளருக்கு.

சலீமுடன் வாக்குவாதம்
இதேபோலதான் நேற்றுமுன்தினமும் சலீம் தன் வேலையை காட்ட, அந்த குழந்தை ஓடிப்போய் அம்மாவிடம் நடந்ததை சொல்லி அழுதிருக்கிறது. "சலீம் சார் என்னை மடியில தூக்கி வச்சிக்கிட்டு கண்ட கண்ட இடத்துல தொடறார்" என்று சொல்லவும் பதறியே போய்விட்டார் தாய். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று பள்ளிக்கே வந்துவிட்டனர். இதுபற்றி சலீமிடம் கேட்டதற்கு, அவர் தகராறுக்கே வந்துவிட்டார். பெற்றோரிடம் சரமாரியாக சலீம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

சரமாரி அடி
இப்படியே விட்டால் சரிபடாது என்று நினைத்த பெற்றோர், உறவினர்கள் என அனைவருமே சேர்ந்து சலீமை கட்டி வைத்து சரமாரியாக அடித்து வெளுத்தனர். தகவல் அறிந்தது தில்லைநகர் போலீசார் வந்துவிட்டார்கள். சம்பவம் குறித்து அறிந்து சலீமை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள். ஆனாலும் பெற்றோருக்கு மனசே ஆறவில்லை.

அதிமுக பொறுப்பாளர்
தினமும் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று குழந்தை ஏன் சொன்னாள் என தற்போதுதான் புரிகிறது என்று கதறிய பெற்றோர் குமுறினார்கள். இதற்குள் தகவலறிந்து கிராம மக்களும் பெற்றோருடன் இணைந்தனர். அந்த நேரம் பார்த்து அதிமுக வட்டசெயலாளரை ஸ்டேஷனுக்கு அழைத்த சென்ற தகவலை கேட்டு, மேற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக பொறுப்பாளர் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா வந்துவிட்டார்.

போக்சோவில் கைது
முஸ்தபாவை பார்த்ததும் ஒட்டுமொத்த ஊர்ஜனங்களும் கண்டித்து கோஷம் எழுப்பினர். சலீமை காப்பாற்ற வந்திருக்கிறீர்களா? அவருக்கு போலீசார் யாரும் துணை போகக்கூடாது, நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று மக்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்து உரிய விசாரணைக்கு பின்னர் சலீமை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications