அடுத்த ஷாக்.. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விஷம் கலப்பு? திருச்சி அருகே பரபரப்பு.. தீவிர விசாரணை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கஞ்சாநாயக்கன்பட்டி அருகே செட்டியபட்டி கிராம மக்களுக்கு மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தான் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விஷம் கலந்துள்ளதாக தகவல் பரவிய நிலையில் குடிநீர் மாதிரியை ஆய்வுக்கு எடுக்கப்பட்ட நிலையில் அதில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட நிலையில் போலீசார், அதிகாரிகள் விசாரணை துவங்கி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அன்னவாசல் ஒன்றியத்தில் வேங்கைவயல் கிராமமம் உள்ளது. இங்கு பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. இது தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வேங்கை வயல் பிரச்சனை
வேங்கைவயல் கிராமத்தில் சுமார் 30 பட்டியலின மக்கள் அந்த குடிநீரை பயன்படுத்திய நிலையில் திடீர் உடல்நலக் குறைவும், ஒவ்வாமையும் ஏற்பட்டது. இதையடுத்து குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தபோது தான் மலம் கலந்த விஷயம் தெரியவந்தது. சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாதிய வன்மத்தால் மலம் கலந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தாழ்த்தபட்டோர் ஆணையம் நோட்டீஸ்
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏராளமானவர்களிடம் போலீசார் விசாரித்தும் கூட இன்று வரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. பட்டியலின மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளும் படி போலீசார் மிரட்டுவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையே புதுக்கோட்டை கலெக்டர், எஸ்பி ஆகியோரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருச்சி மேல்நிலை தொட்டியில்..
இந்நிலையில் தான் தற்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விஷம் கலந்துள்ளதாக தகவல் பரவிய சம்பவம் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மணப்பாறையை அடுத்த கஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டு செட்டியபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

தொட்டியில் விஷம் கலப்பு?
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தான் மர்மநபர் விஷம் கலந்ததாக தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குடிநீர் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணை
இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‛‛பொதுமக்கள் விஷம் கலந்ததாக கூறியதால் நீர் வெளியேற்றப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்கு நீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு வந்த பிறகு தான் விஷம் கலக்கப்பட்டதா? இல்லையா? என்பது தெரியும் என கூறியுள்ளனர்'' என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications