அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும்.. கூட்டணி ஆட்சி நிச்சயம்.. பாஜக குரலில் சொன்ன டிடிவி தினகரன்!
திருச்சி: 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணி ஆட்சியே அமையும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறும் என்று கூறிய அவர், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷாவிடம் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக தரப்பில் தொடர்ச்சியாகக் கூட்டணி ஆட்சி என்று சொல்லி வரும் நிலையில், அதிமுக தரப்பில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா பேசி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.

இதனிடையே அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு இடம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, காலம் பதில் சொல்லும் என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். இதன் மூலமாக அமமுகவை கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தொடர்ச்சியாக நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாகப் பேசி வருகிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைத்திருந்தது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடரவே அமமுக விரும்புவதாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசுகையில், நாங்கள் ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறோம்.
2026ல் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்ப அமமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் தான் இருக்கும். இவை அடுத்த 6, 7 மாதங்களில் ஆட்சி மாற்றம் நடந்தபின் சரியாகிவிடும். தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்து, கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும்.
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வென்றாலும், கூட்டணி ஆட்சியே அமைக்கப்படும். திமுகவை வீழ்த்த கூட்டணியைப் பலப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா அதைத்தான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்பது கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு பெறுவார்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த போதும், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பாஜக இடம் கொடுத்தது. அதனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷா அறிவிப்பார். தொடர்ந்து, அன்வர் ராஜா எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்தவர். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. எனது நண்பர்.. அவர் திமுகவில் இணைந்தது எனக்கு வருத்தம்தான் என்று தெரிவித்துள்ளார்.
-
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications