Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போர்க்களமாக காட்சியளித்த திருச்சி விமான நிலையம்.. அணிவகுத்து நின்ற ஆம்புலன்ஸ்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து வானில் மணிக்கணக்கில் வட்டமடித்த விமானம் தரையிறங்க முயன்ற நிலையில் 20க்கும் அதிகமான வாகனங்கள் விமான நிலையத்தில் அணிவகுத்து நின்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் இன்று மாலை 5.40 மணிக்கு 141 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 என்ற விமானம் சார்ஜா புறப்பட்டு சென்றது.

tiruchirappalli emergency landing air india

விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து மேலே பறந்த விமானத்தில் சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதாவது லேண்டிங் கியரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விமானங்களின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டதால் சக்கரங்களை உள்ளே இழுக்க முடியாமல் விமானம் பறந்துள்ளது. இதையறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை தரையிறக்க முயன்றனர். ஆனால் அதிலும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வட்டமடித்து கொண்டிருந்தது.

விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு அதனை தரையில் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். விமானத்தில் எரிபொருள் குறைந்த நிலையில் இரவு 8.15 மணிக்கு விமானம் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. முன்னதாக திருச்சி விமான நிலையமே பரபரப்புக்குள்ளாகியது. விமான நிலையத்தை நோக்கி 20க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் வந்தன. தீயணைப்பு வாகனங்கள் வந்தன.

விமான நிலைய அதிகாரிகள், சுகாதாரத்துறையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் அதிகமாக குவிந்ததால் விமான நிலையம் போர்க்களமாகியது. அங்கிருந்த பயணிகள் அனைவரும் பரபரப்பான மனநிலையில் காணப்பட்டனர். ஆனால் விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் நிம்மதியடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+