திருச்சி கிழக்கு தொகுதி.. ஸ்டாலின் அல்ல.. திமுக சார்பாக களமிறங்கும் அன்பில் மகேஷ்?
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் களமிறங்கக் கூடும் என்று அக்கட்சியினர் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன. அதேபோல் தவெக சார்பாக குப கிருஷ்ணன் வேட்பாளராக போட்டியிடக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்து, ஆட்சியை பிடித்துள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி மட்டும் தவெக அமைச்சரவையில் இடம்பெற இருக்கிறது. இந்த தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதியிலும் போட்டியிட்டு வென்றார்.

சட்டப்படி 2 தொகுதிகளில் வென்றால், ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். தொடர்ந்து நேற்று திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அடுத்த 6 மாதங்களில் திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது தவெகவுக்கு அக்னி பரீட்சையாக மாறும் என்று பார்க்கப்படுகிறது. தவெக ஆட்சி அமைத்த 6 மாதங்களில் நடக்கும் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால், அது ஆட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கிவிடும். இதனால் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை அவ்வளவு எளிதாக தவெக எடுத்து கொள்ளாது என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுகவும் தேர்தலின் போது தவெகவை குறைத்து மதிப்பிட்டது.
இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் நேரடியாக திமுக vs தவெக என்றே போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திருச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அன்பில் மகேஷ் தீர்மானம் போட்டுள்ளார். ஆனால் திமுகவினர் மத்தியில் வேறொரு விவாதம் நடந்து வருகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை களமிறக்க திமுக ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது. திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட அன்பில் மகேஷ் 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் விஜயகுமாரிடம் தோல்வி அடைந்தார். திருச்சி மாவட்ட பொறுப்பாளராகவும் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் இருந்தனர்.
இதனால் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்பில் மகேஷ் களமிறக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் திருச்சி கிழக்கு தொகுதியில் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications