மெசேஜ் மூலம் உதவி கோரிய மாற்றுத்திறனாளி... வீடு தேடிச்சென்று நிவாரணப்பொருட்கள் வழங்கிய அன்பில் மகேஷ்
திருச்சி: திருச்சி மாவட்டம் மருங்காபுரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் குறுந்தகவல் (மெசேஜ்) மூலம் உதவி கோரிய நிலையில், அந்த இளைஞரை நேரில் சென்று சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கினார் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். தனது சொந்த நிதியிலேயே அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய தொகுதிகளுகுட்பட்ட பல இடங்களில் விநியோகித்து வருகிறார்.

இதனிடையே துவரங்குறிச்சி அருகே உள்ள மருங்காபுரியில் இருந்து மாற்றுத்திறனாளி இளைஞர் விஜய் என்பவர் ஊரடங்கால் தங்கள் குடும்பத்திற்கு வாழ்வாதாரம் இல்லை என்றும், உணவுக்கே சிரமப்பட வேண்டியுள்ளதாகவும் அன்பில் மகேஷ் அலைபேசி எண்ணுக்கு நேற்று மெசேஜ் (குறுந்தகவல்) அனுப்பியிருந்தார். அதனை பார்த்த அன்பில் மகேஷ் இன்று 55 கி.மீ. பயணித்து நேரடியாக அந்த இளைஞரை வீடு தேடிச்சென்று சந்தித்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கினார். மேலும், அந்த இளைஞருக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் அளிக்கும் வகையில் ஊக்கப்படுத்தினார்.
இதனை பார்த்த மருங்காபுரி பகுதி மக்களும், திமுக நிர்வாகிகளும் நெகிழ்ந்தனர். நிர்வாகிகளை அனுப்பி உதவி செய்வார் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவரே நேரில் வந்தது தாங்களே எதிர்பார்க்காத ஒன்று எனவும் மாற்றுத்திறனாளி இளைஞர் விஜயின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனிடையே சுட்டெரிக்கும் வெயிலில் தூய்மை பணி மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களின் தாகம் தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ. நேற்று குளிர்பானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications