திருச்சி ஸ்ரீரங்கம் பெரியார் சிலை விவகாரம்.. 29ம் தேதி முக்கியமான நாள்.. அர்ஜுன் சம்பத் பேட்டி
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் மனது புண்படும்படி கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் பக்தர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் வேண்டுமென்றே கோவிலுக்கு முன்பு தந்தை பெரியார் சிலையை திராவிட கழகம் நிறுவினர்.இது தொடர்பாக போராடியதற்கு எதிராக எங்கள் மீது போடப்பட்ட வழக்கில் 29ம் தேதி தீர்ப்பு வருகிறது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
திருச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டியில் கூறுகையில், "கடந்த 2006 ஆம் ஆண்டு 108 திவ்ய தேசங்களில் முதன்மையான தளமாக விளங்கக்கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பாக, அப்போதைய முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியின் ஒத்துழைப்பு காரணமாக திராவிட கழகம் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், எந்த விதமான அனுமதியும் பெறாமல் தந்தை பெரியார் சிலையை நிறுவியுள்ளனர்.

கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் மனது புண்படும்படி கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் பக்தர்களின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் வேண்டுமென்றே கோவிலுக்கு முன்பு தந்தை பெரியார் சிலையை திராவிட கழகம் நிறுவினர்.
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு
இந்நிலையில் சிலையை நிறுவினால் இந்து மக்களுக்கு சார்பாக போராட்டங்கள் நடைபெறும் என்பதால் வேண்டுமென்றே இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கின் மீது திருச்சி நடுவர் நீதிமன்றம் நீதி அரசர் திறப்பு வழங்குவதாக இருந்தது பின்பு வருகின்ற 29ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.
திக கொள்கையில் திமுக
திமுகவின் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு திராவிட கழகம் அவர்களின் கொள்கையை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவற்றை கண்டித்து இந்து மக்கள் கட்சி தொடர்ந்து சட்ட ரீதியான போராட்டங்களை தொடர்வோம்.
நம்பிக்கை
இத்தகைய பிரச்சினை தமிழ்நாட்டில் இந்து கோயிலுக்கு எதிராக மட்டுமே நடைபெற்று வருகிறது. நாங்கள் முழுமையாக நீதிமன்றத்தை நம்பி உள்ளோம் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஸ்டாலினுக்கு தூக்கம் இல்லை
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அமருவார்..அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதேசமயம் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமித்ஷா அவர்கள் மற்றும் மோடி அவர்கள் தமிழகம் வந்த நாள் முதல், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு தூக்கம் இல்லாமல் இருக்கிறார்.
திமுகவின் சதி விஜய்
திமுகவின் சதியால் ஜோசப் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் மக்களை ஏமாற்றுவதற்காக இருவரும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறார்கள் ஒருபோதும் மக்களை ஏமாற்ற முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், மோடியின் அலை வீச தொடங்கி உள்ளது" இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications