பாஜக நிர்வாகி சவுதாமணி திடீர் கைது.. சென்னையில் கைது செய்த திருச்சி போலீஸ்.. காரணம் இதுதானாம்!
திருச்சி: பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், பாஜக ஊடகப் பிரிவின் செயலாளருமான சவுதாமணி சைபர் கிரைம் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான சவுதாமணி, திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 6 மணியளவில் சவுதாமணியை சென்னையில் கைது செய்த திருச்சி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக நிர்வாகி சவுதாமணி, ஆசிரியை ஆகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். பெண் தொழில் முனைவோராக உள்ளார். இவர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி ஏற்கனவே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சௌதாமணியை கைது செய்து, பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications